Erode

News January 12, 2025

ஈரோடு இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர்கள்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக வாக்கு சாவடிகளுக்கு 284 முதன்மை அலுவலர்கள், 284 முதல் நிலை அலுவலர்கள், 284 இரண்டாம் நிலை அலுவலர்கள், 284 மூன்றாம் நிலை அலுவலர்கள், 58 நான்காம் நிலை அலுவலர்கள் என மொத்தம் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர் என. மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

இறுதி வேட்பாளர் பட்டியல் ஜன.20ல் வெளியீடு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.17 நிறைவடைகிறது. 18ல் வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. ஜன.20 பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்று தெரியவரும். 2023 இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News January 12, 2025

ஈரோடு: ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

image

ஈரோடு சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (39). நிதி நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற பிறகு, மது அருந்திவிட்டு மனஉளைச்சலுடன் காணப்பட்ட அவர், ஈரோட்டுக்கும், தொட்டிபாளையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில், ரயிலில் அடிபட்டு, பிணமாக கிடந்தார். ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 12, 2025

ஈரோடு கிழக்கில் யார் அதிகம்? 

image

ஈரோடு மாவட்டத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 5ல் வெளியிடப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

News January 12, 2025

நாதக வேட்பாளர் பொங்கலுக்கு அறிவிப்பு

image

ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கல் அன்று வெளியிடப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் அதிமுக, தேமுதிக போட்டியிடவில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 12, 2025

ஈரோட்டை காக்கும் பண்ணாரி அம்மன்

image

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகம்-கர்நாடக மாநில எல்லையில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. இங்கு தினந்தோறும் பூஜைகள் நடைபெறும். அமாவாசை, பௌர்ணமி, தமிழ் (ம) ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி மாதம், தீபாவளி, பொங்கல் போன்ற நாள்களில் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

News January 12, 2025

காலை 7 மணிக்கு தொடங்கும் இடைத்தேர்தல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று சரியாக காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவு பெறும். கடைசி நேரத்தில் வாக்களிக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. 6 மணிக்கு பிறகு வாக்காளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 12, 2025

வருமானவரி சோதனை நிறைவு 

image

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் ஜன.7 முதல் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது சோதனை நிறைவு பெற்றது.

News January 12, 2025

நாளை வேட்புமனு தாக்கல் செய்யலாம்

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை(13.1.25) இரண்டாவது நாள் துவங்குகிறது. இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 10ம் தேதி முதல் துவங்கியது. வேட்புமனு செய்ய கடைசி தேதி ஜன.17ஆகும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதுவரை 3 பேர் வேட்புமனு செய்துள்ளனர்.

News January 11, 2025

தமிழக அணியில் சென்னிமலை வீரர்

image

ஈரோடு, சென்னிமலை பாரதி நகரைச் சேர்ந்த கே கிஷோர் என்ற இளைஞர், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணிக்காக தேர்வாகி விளையாடி வருகிறார். சென்னிமலையில் இருந்து முதல் முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி உள்ள முதல் நபர் இவர் ஆவார். கிஷோர் முதல் போட்டியில் குஜராத்துக்கு எதிராக 55 ரன்கள் விளாசியுள்ளார்.

error: Content is protected !!