India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முழுவதும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு அடுத்த மாதம் மார்ச் 3ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 23,071 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகளின் விவரம் தேர்வு எண் மற்றும் முகப்பு சீட்டு அந்தந்த தேர்வு மையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரி புதூர் பகுதியில் நேற்று மாலை டெம்போவில் 15 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியே வந்த பஸ் மீது, டெம்போ மோதியது. இதில் டெம்போவில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னிமலை அடுத்துள்ள குமராபுரி பகுதியில், முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்படுகிறது. அந்த குப்பை கிடங்கில், இரவு 7:30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து உடனடியாக சென்னிமலை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் சிகரெட் துண்டால் தீ பற்றியதாக தெரிகிறது.
ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது, இன்னும், ஒரு சில கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படி, குழந்தை திருமணம் குறித்து பொதுமக்கள், 89031 67788 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.குழந்தை திருமணம் செய்யும் நபருக்கு, 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்றார்.
ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த10, +2, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் நாளை பிப்.19ல் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கு பெறும் அப்ரண்டிஸ்சிப் பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு மற்றும் முகாம் நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி: 8610492323 ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
ஈரோடு அடுத்த ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில், நாளை மறுநாள் (பிப்.,21) ஈரோட்டில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுப்பவர்கள் இன்று மற்றும் நாளை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிடலாம். மேலும் தகவலுக்கு 9498174836, 9442900373, 9976057118 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோடு மாநகராட்சியில் 2024 மற்றும் 2025 காண குடிநீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும் போது, தினமும் ஒரு வார்டுக்கு ஒரு மொபைல் வாகனம் மூலம் வரி வசூல் செய்யப்படும் எனவும், அந்த வாகனத்திலேயே ரசீது வழங்கப்படும் எனவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் தகவலுக்கு 8675412356, 9499055942 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 24 வது கொண்டை ஊசி வளைவில், தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது, ஈச்சர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அடி பள்ளத்தில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்தவரை, கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்தியமங்கலம், குமாரபாளையம் குன்றின் மேல், அமைந்துள்ளது, புகழ்பெற்ற தவளகிரி தண்டாயுதபாணி கோயில். 500 ஆண்டுகளுக்கு முன்பு, துர்வாசகம் முனிவர், உருவம் இல்லாத சிலையாக, முருகனை, மேற்கு பார்த்து பிரதிஷ்டை செய்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட கடவுளாக இங்கு முருகன் வீற்றிருப்பதால், திருமண தடை, சூனியம், செவ்வாய் தோஷம், போன்ற அனைத்து தடைகளும், முருகனை வழிபட்டால் பறந்தோடுமாம்.
Sorry, no posts matched your criteria.