India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடமும், ஆண்கள் அணி இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் பூப்பந்தாட்ட கழக பொதுச் செயலாளர் விஜய் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று 09-12-2024 இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். எச்சரிக்கையாக இருப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வத்தலகுண்டுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் கொடியேற்று விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திரண்ட த.வெ.க நிர்வாகிகள் ஏற்கெனவே தங்களுக்கு பொறுப்பு வழங்கிவிட்டு தற்போது கட்சியில் பணம் பெற்றுக் கொண்டு புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பொறுப்பை வழங்கி விட்டதாகவும் கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல், தோமையார்புரம் மேடு பகுதியில் கண்ணைக் கட்டி, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தாலுகா காவல் நிலைய போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாண்டிக்குடி மலைகிராமம், முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 3 நாள் நடைபெறும் கோயில் திருவிழாவில், முதல்நாளாக நேற்று அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனாக உடலில் சேற்றைப் பூசிக்கொண்டு, வலம் வந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல்: கடை வாடகைக் கட்டடங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் ஒன்றிய அரசைக் கண்டித்து விக்கிரமராஜ தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பேர் பங்கேற்க உள்ளனர்.. அதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை, காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (‘மது போதையில் பயணம், நொடியில் மரணம் மது அருந்தி வானங்களை இயக்குவதை தவிர்க்கவும்’) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கதவுகள் திறக்காததால், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்று அபாய சங்கலியை பயணிகள் அழுத்தி இடையில் நிறுத்தினர். பின் டிக்கெட் பரிசோதகர் கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டனர். இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே நிர்வாகம் பயணிகளை ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.