Dindigul

News December 11, 2024

சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக உள்ளது: பிரகாஷ்காரத்

image

பழனியில் சிபிஎம் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ்காரத் பேசியதாவது, இந்திய அரசு மதச்சார்பற்ற அரசாகும். ஆனால், தற்போதுள்ள பாஜக அரசு இந்தியாவை இந்துத்வா மயமாக்கி வருகிறது. சிறுபான்மையினரான இஸ்லாமியா்களுக்கு எதிரான செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார். 

News December 11, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

திண்டுக்கல் மாவட்டம் 2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் (15.12.2024) அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு, (7401703504) அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். 

News December 11, 2024

திண்டுக்கல்லில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

திண்டுக்கல்லில் இன்றைய (11.12.24)முக்கிய நிகழ்வுகள்: ➤ பழநி சார் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் முகாம். ➤ காலை 10.30 மணி, திண்டுக்கல் தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம். ➤ தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பொது மாநாடு மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. 

News December 11, 2024

திண்டுக்கல் அருகே விபத்து 2 பேர் பலி

image

திண்டுக்கல்: மலைக்கேணி கம்பிளிம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் பஸ்- பைக் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விபத்து நடந்த பகுதியில் விரைந்து சென்ற போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 11, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

திருவள்ளுவருக்கு 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டு, வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் கருத்தரங்கம், வினாடி-வினா, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தை அணுகி போட்டிகளில் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

News December 10, 2024

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலான விபத்துக்களில் தலையில் காயம் ஏற்படுவதால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுகிறது. தலைக்கவசம் அணிவோம் உயிரிழப்பை தவிர்ப்போம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 10, 2024

கொலை செய்த வழக்கில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை

image

திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39) என்பவர் கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் திண்டுக்கல் தாலுகா காவலர்கள் வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த 6 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 10, 2024

தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடி சேர்க்கை

image

குஜிலியம்பாறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2024-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 09.12.2024 முதல் 31.12.2024 வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ (அ) தொலைபேசி எண் 9499055764 மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். 

News December 10, 2024

திண்டுக்கல்லில் முற்றுகை போராட்டம் அறிவிப்பு 

image

திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், வேலை வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக 2,000 மாற்றுத்திறனாளிகள், மாநிலத் தலைவர் வில்சன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை டிச.18ஆம்  தேதி முற்றுகையிட உள்ளதாக, மாவட்ட தலைவர் பகத்சிங் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!