Dharmapuri

News June 5, 2024

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை சாவு

image

காரிமங்கலம் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தனின் மகன் கௌதம்(3) என்ற குழந்தை இன்று விளையாடிக் கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து விட்டது. பின்னர் குழந்தையை மீட்டு காரிமங்கலம் ஜி.ஹெச்சுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்

News June 5, 2024

கவனம் ஈர்த்த தருமபுரி தொகுதி

image

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணியும், அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகனும் தோல்வியைத் தழுவினர். வெற்றியைக் குறிவைத்து சவுமியா அன்புமணியை களமிறக்கிய பாமகவின் வியூகம் பொய்த்து போனது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

News June 5, 2024

தருமபுரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தருமபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 5, 2024

சுற்றுச்சூழல் தினம்: புதிய ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

image

தருமபுரி புதியதாக கட்டப்படும் வரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் மரக்கன்றுகள் நட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிலிப்பின்ஸ் ராஜ்குமார், கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் ,  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News June 5, 2024

தர்மபுரியில் லேசான மழைக்கு வாய்ப்பு!

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.

News June 5, 2024

தருமபுரி தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
திமுக வேட்பாளர் ஆ. மணி- 4,32,667 வாக்குகள்
பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி- 4,11,367 வாக்குகள்
அதிமுக வேட்பாளர் அசோகன்- 2,93,629 வாக்குகள்
நாதக வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன்- 65,381வாக்குகள்

News June 5, 2024

தர்மபுரி தொகுதியில் 1070 செல்லாத வாக்குகள் பதிவு

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று(ஜூன் 4)வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குகள் என தொகுதி முழுவதும் 10,074 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 1,070 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகியுள்ளது. 

News June 4, 2024

பாலக்கோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆ.மணி 21,750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இன்று மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.

News June 4, 2024

தருமபுரியில் திமுக வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ. மணி 4,11,602 வாக்குகள் பெற்று 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பாஜக – பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,98,234 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News June 4, 2024

தர்மபுரி: திமுக வேட்பாளர் வெற்றி

image

2024 நாடாளுமன்ற தொகுதியின் தர்மபுரி நாடாளுமன்றத்தின் திமுக வேட்பாளர் மணி 22,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கட்சி நிர்வாகிகள், தர்மபுரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்ந்த நிர்வாகிகள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.