Dharmapuri

News January 12, 2026

தருமபுரி: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 12, 2026

அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

image

பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாடுவோம் என வாழ்த்து வெளியாகி உள்ளது.

News January 12, 2026

தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 12, 2026

தருமபுரி: ஏரியில் மிதந்த சடலம்!

image

தருமபுரி, எர்ரங்காட்டு கொட்டகையை சேர்ந்த மருந்து கடை ஊழியர் ஆறுமுகம் (47). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆறுமுகம் கடந்த ஜனவரி 7-ம் தேதி மாயமானார். இவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு (ஜன.10) மதிக்கோன்பாளையம் ஏரியில், ஆறுமுகம் சடலமாக மீட்கப்பட்டார். ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என அவரது மனைவி ஜோதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 12, 2026

தருமபுரி மக்களுக்கு ALERT!

image

தருமபுரி மக்களே! பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500. 2. Luggage தொலைந்து போனால் – 044-49076326. 3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500. 4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.12) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.26, கத்தரிக்காய்: ரூ.15, வெண்டைக்காய்: ரூ.36, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.24, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.25, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன

News January 12, 2026

தருமபுரியில் மின்தடை; உங்க எரிய இருக்கா?

image

தருமபுரி மாவட்டம் பொம்மிடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக நாளை (ஜன.13) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

News January 12, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி

image

அரூர், மேல் பாட்ஷாபேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஹமீது (55). ஆட்டோவில் 2 பயணிகளுடன் மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அப்துல் ஹமீது பலத்த காயம் அடைந்தார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்துல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

image

ஒசஅள்ளி புதூரை சேர்ந்த பிரபுவின் மனைவி ராஜேஸ்வரி (34) ஜன.10-ம் தேதி கல்லகொல்லை மேட்டில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரியின் அக்காள் கணவரான அனுமந்தனுக்கும் (40) கள்ள தொடர்பு இருந்துள்ளது. கடந்த ஜனவரி 10 ம் தேதி ராஜேஸ்வரியை உல்லாசத்திற்கு அழைத்து அவர் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அனுமந்தன் செங்கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

News January 11, 2026

தருமபுரியில் கஷ்டங்களை நீக்கும் அற்புதத் தலம்!

image

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோயில், தென்னகத்தின் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகும். நம் வாழ்வின் தீராத வினைகளையும், எதிர்ப்புகளையும் நீக்கும் சக்தி படைத்தவர் இக்கோயில் காலபைரவர். குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால், ராகு-கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர்!

error: Content is protected !!