Dharmapuri

News January 14, 2026

தருமபுரி காவல்துரையின் இரவு ரோந்து விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.14) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

தருமபுரி: அடுத்தடுத்து கார் மோதி மூதாட்டி கோர பலி!

image

ஓசூரில் இருந்து காரிமங்கலத்திற்கு முனுசாமி (70) என்பவர், அவரது மகனை பார்க்க நேற்று வரும் வலையில், அவர் அகரம் பைபாஸ் சாலையில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது முதலில் ஒரு கார் மோதியதில் கீழே விழுந்துள்ளார். மேலும், பின்னால் வந்த மற்ற கார் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை.

News January 13, 2026

தருமபுரி மக்களே முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு!

image

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள். செம திட்டம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

தருமபுரி: மிஸ் பண்ணிடாதீங்க – ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

image

தருமபுரி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் 1 பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளம் ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஜன.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்!

News January 13, 2026

தருமபுரியில் பொங்கல் விழா; எம். பி அழைப்பு

image

தருமபுரி மாவட்டக் கழக அலுவலகத்தில் பொங்கல் விழா நாளை (ஜன.14) காலை 10.00 மணி அளவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு எம். பி மணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

தருமபுரி: சாமந்திப்பூ விற்பனை படுஜோர்!

image

தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு சாமந்திப்பூ வியாபாரம் அதிகரித்துள்ளது. இதில் 1 கிலோ சாமந்தி பூ ரூ. 50 என விற்பனையானது. மேலும் ஒரு குவிண்டால் (100 கிலோ) பூ ரூ.5000 முதல் ரூ.8500, குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் விளைச்சல் அதிகரித்தால் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவித்த்தனர்.

News January 13, 2026

தருமபுரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

தருமபுரி: புதிய பாஜக நிர்வாகிகள் நியமனம்

image

தருமபுரி மாவட்ட பாஜகவில் பொருளாதாரப் பிரிவில் புதிய மண்டல் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாஜக மண்டல இணை அமைப்பாளர்களாக பரமேஷ், மண்டல செயலாளராக ரங்கநாதன், முனிரத்தினம், சரவணன், முனிராஜ், சுந்தரம் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக தருமபுரி பாஜக மாவட்ட தலைவர் சரவணன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

தருமபுரி: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில்<<>> விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!