Dharmapuri

News January 13, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.13) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.28, கத்தரிக்காய்: ரூ.15, வெண்டைக்காய்: ரூ.36, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.22, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.28, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 13, 2026

தருமபுரி: +2 போதும் மத்திய அரசில் வேலை!

image

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்‌ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

தருமபுரி: இட்டு வைப்பு பத்திரம் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இட்டு வைப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 13, 2026

தருமபுரி: இட்டு வைப்பு பத்திரம் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இட்டு வைப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 13, 2026

தருமபுரி: பொங்கல் பரிசு வரலையா..?

image

தருமபுரி மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

News January 13, 2026

தருமபுரி: நடத்துனர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

நல்லகுட்லஅள்ளியை சேர்ந்த பஸ் கண்டக்டர் அகிலரசன் (30). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் பயணித்த வினோத்குமாரிடம் (35) டிக்கெட் எடுக்கும்படி கூறினார். அதற்கு வினோத்குமார் “என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா?” என தகராறில் ஈடுபட்டார். பின் வினோத் பஸ் நிற்கும் போது கீழே கிடந்த கட்டையால் அகிலரசனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.

News January 13, 2026

தருமபுரி: மாமனாரை கொன்ற மருமகன்!

image

தருமபுரி, எரங்காட்டு கொட்டாயை சேர்ந்தவர் ஆறுமுகம் (47) மருந்துக்கடை ஊழியராக உள்ளார். இவருக்கு ஜோதி என்கிற மனைவியும் 2 மகன்கள் & 2 மகள்கள் உள்ளனர். ஜன.7ம் தேதி மதிகோன்பாளைய ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜோதிக்கும் அவரது மருமகனான சீதாராமனும் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது. இதனை ஆறுமுகம் கண்டித்ததால், ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.

News January 12, 2026

தருமபுரி: ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை – உடனே முந்துங்கள்!

image

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 12, 2026

தருமபுரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கொட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர் தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை (ஜன.13) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் படைவீரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று அறிவித்துள்ளார்.

News January 12, 2026

தருமபுரி: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

தருமபுரி மக்களே! இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!