Dharmapuri

News January 14, 2026

தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தருமபுரி: UPI error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 பெறலாம்!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் புகார் பண்ணுங்க. (HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030) பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 14, 2026

தருமபுரி: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

தருமபுரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0422-2247917, தொழிலாளர் இணை ஆணையர் -0427-2405746 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

News January 14, 2026

தருமபுரி: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே! ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தருமபுரியில் மதுக்கடைகள் அடைப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினத்தை (ஜன.26) முன்னிட்டு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஜனவரி 15-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 17-ம் தேதி காலை வரை டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் கிளப்புகள் அனைத்தும் இயங்காது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

தருமபுரி விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு!

image

தருமபுரி மாவட்ட வேளாண் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை (இயற்கை வேளாண்மை) குறித்த இரண்டு நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் வரும் ஜனவரி 24, 25 வெள்ளக்கல் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சியில் வேளாண் விவசாயிகள் பங்கேற்க முன்பதிவிற்கு பாரம்பரிய வேளாண் குழுவை தொடர்புகொண்டு 9597376088 தங்கள் பெயர் பதிவு செய்து கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 14, 2026

தருமபுரியில் லாரி கவிழ்ந்து விபத்து!

image

நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று (ஜன.14) விடியற்காலை 5 மணியளவில் சேலம் நோக்கி கனரக வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News January 14, 2026

தருமபுரி: இளம்பெண்ணை தாக்கிய காட்டு யானை!

image

மாரண்டஅள்ளி அடுத்த ஈச்சம்பள்ளத்தை சேர்ந்தவர் சுதா (35). வனப்பகுதி அருகே உள்ள இந்த கிராமத்தில் யானை நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.13) அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சுதாவை யானை தாக்கியது. இதில் காயமடைந்த சுதாவை குடும்பத்தினர் மீட்டு நாகதாசம்பட்டி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News January 14, 2026

தருமபுரி: வாலிபர் தலை நசுங்கி பலி!

image

செங்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கோவையில் பி.எஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வந்த அருண்குமார் நேற்று (ஜன.13) நல்லம்பள்ளிக்கு பைக்கில் சென்ற போது குடிப்பட்டி புதிய காலனி அருகில் நுரம்பு லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தருமபுரி காவல்துரையின் இரவு ரோந்து விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.14) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!