India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க தருமபுரி மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, தருமபுரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600941391-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தருமபுரியில், வன உயிரினங்களைத் துன்புறுத்தினாலோ (அ) வேட்டையாடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. பொங்கலையொட்டி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், மது அருந்துதல், மரங்களை வெட்டுதல் & பட்டாசு வெடித்து விலங்குகளை அச்சுறுத்தும் செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகும். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன-14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் ,தோப்பூரில் ஜீலான்பாஷா, மதிகோன்பாளையத்தில் ஹரிச்சந்திரன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

(ஜன.14)தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தநோக்கத்திற்கான TANFINET விண்ணப்ப இணைய தள இணைப்பை (https://tanfinet.tn.gov.in) பயன்படுத்திக் கொள்ளுமாறு தர்மபுரி ஆட்சியர் சதீஸ் தெரிவித்தார்.

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, குறள் சார்ந்த ஓவியப்போட்டி (ஜன.19) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.போட்டிகள் தொடர்பான விவரங்களுக்கு 04342-230774 என்ற தொலைபேசி எண்ணிலும், போட்டியில் கலந்து கொள்ள tamildev.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.தர்மபுரி ஆட்சியர் சதிஸ் அறிவித்துள்ளார்.

தருமபுரி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில் *தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில்,
*அதியமான் கோட்டை காலபைரவர் கோவில்,
*குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்,
கொட்டாய் பெருமாள் கோவில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

தருமபுரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

தருமபுரியில் திமுகவின் சமத்துவ பொங்கலை ஒட்டி நாளை (ஜன.15) கோலப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தருமபுரி மாவட்ட கழக பொறுப்பாளர், வழக்கறிஞர் ஆ.மணி வெளியிட்டுள்ளார். இதில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.