India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவர் பண்ருட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் சரிவர கல்லூரி செல்லாத காரணத்தால், தட்சிணாமூர்த்தி மாணவனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் இருந்த தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 07) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் 31.7.2025 மற்றும் இதர காரீப் பருவ பயிர்களான மணிலா, கம்பு, மற்றும் எள் பயிர்கள் பிர்கா அளவிலும் விவசாயிகள் பதிவு செய்ய கடைசி நாள் 16.8.2025 ஆகும். எனவே, கடலூர் மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கடலூர் உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் ’66’ காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974144>>(பாகம்-2)<<>>

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை.8) பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, அன்னவல்லி, ராமாபுரம், வேப்பூர், சேப்பாக்கம், கழுதூர், கோரணப்பட்டு, புலியூர்காட்டுசாகை, தோப்புக்கொல்லை, கண்ணாடி, அகரம், பி.என். குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் செய்யவும் !

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (ஜூலை 7) ஆம் தேதி குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ச.கு.வே மேல்நிலைப் பள்ளி, அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !
Sorry, no posts matched your criteria.