Cuddalore

News March 16, 2026

கடலூர்: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

image

கடலூர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

கடலூர்: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

திட்டக்குடி: காரில் எடுத்து சென்ற ரூ.12 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை ஒட்டி திட்டக்குடி அடுத்த இறையூர் பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ். மாத்தூரிலிருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் நோக்கி வேல்முருகன் என்பவர் சென்ற காரில் இருந்த ரூ.12 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2026

குரூப் 2 தேர்வில் காப்பி அடித்த வாலிபர்

image

தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நேற்று குரூப் 2 தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு அறையில் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆய்வு செய்தபோது, வாலிபர் ஒருவர் காப்பி அடிப்பதற்காக பேனா வடிவிலான எலக்ட்ரானிக் டிவைஸ் எடுத்து வந்திருந்தார். இதைப் பார்த்ததும் அவர் அதனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 16, 2026

கடலூர்: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL <<>>என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

News March 16, 2026

பதுக்கி வைத்திருந்த 110 சிலிண்டர்கள் பறிமுதல்

image

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கிடையே நேற்று முதுநகரில் உள்ள குடோனில் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வழங்கல் துறைக்கு கிடத்த தகவல் கிடைத்தது. அதன்படி அதிகாரிகள் சோதனை செய்ததில், விற்பனைக்கு வைத்திருநத 47 சிலிண்டர்கள், 63 காலி சிலிண்டர்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2026

கடலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

image

வெங்கனூர் கைகாட்டி அருகே நேற்று இரவு வட மாநிலத்தை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ராமநாதன் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்துப் இறந்தவரின் விவரம் குறித்தும், விபத்து ஏற்படுத்தி வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2026

கடலூரில் நாளை நடக்க இருந்த குறைகேட்பு கூட்டம் ரத்து

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடக்க இருந்த குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!