Cuddalore

News August 31, 2024

கடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் ஆய்வு செய்தனர். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரடியாக சென்று சிசிடிவிகள் ஆய்வு செய்து ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி ஆணையாளர் அனு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

News August 31, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் நிரந்தரமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் e-Shram இணையதளத்தில் பதிவு செய்து, புதிய ரேஷன் கார்டு பெறும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் வட்டார வழங்கல் அலுவலரால், விசாரணை செய்து, நிரந்தரமாக கடலூர் மாவட்டத்தில் தங்கி உள்ளவர்களுக்கு, புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 31, 2024

வடலூர் பணிமனையில் புதிய குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு

image

வடலூர் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓய்வு நேரத்தில் தங்கும் புதிய குளிரூட்டப்பட்ட அறை நேற்று திறக்கப்பட்டது. புதிய குளிரூட்டப்பட்ட ஓய்வறையை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல பொது மேலாளர் ராகவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News August 31, 2024

கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் செயல்பட கோரிக்கை

image

கடலூரில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டதால், 127 ஆண்டுகள் கடந்த பழைய கலெக்டர் அலுவலகம் பராமரிப்பு இன்றி உள்ளது. அரசு அலுவலகங்களை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தால் பழைய நினைவுச் சின்னமாக இந்த கட்டடம் விளங்கும்.

News August 30, 2024

தீட்சிதர்கள் ரூ.200 வசூல் – பெண் புகார்

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனசபை மீது ஏறி தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய, பக்தர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக தீட்சிதர்கள் மீது ஜெயஷீலா எனும் பக்தர் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த விவகாரம் மீண்டும் வெடித்திருக்கிறது. பக்தர் தொடர்ந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

News August 30, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை அளவு நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி வேப்பூரில் 54 மி.மீ மழையும், கீழ்செருவாயில் 29 மி. மீ, மே.மாத்தூரில் 28 மி.மீ, பெலாந்துறையில் 24.2 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 23.2 மி.மீ, கடலூரில் 19.1 மி.மீ, குறிஞ்சிப்பாடியில் 18 மி.மீ மழை பதிவாகியது.

News August 30, 2024

கடலூர் மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்

image

மத்திய சிறையில் நேற்று சிறை காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது முதல் பகுதி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனை அருகில் உள்ள கட்டிடத்தில் கிடந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் பலத்த பாதுகாப்பு மீறி சிறை மருத்துவமனை கட்டிடத்தில் கஞ்சா பொட்டலம் எப்படி வந்தது என்பது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News August 30, 2024

ரவுடிகளை பிடிக்க எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் நடந்த 135 திருட்டு சம்பவங்களில் 118 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரவுடிகளை கட்டுப்படுத்த சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையினர் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்.பி. ராஜாராம் தெரிவித்துள்ளார். 

News August 30, 2024

கடலூர் மார்க்கெட்டில் ஆட்சியர் ஆய்வு

image

பண்ருட்டி மார்க்கெட் பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (29.08.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு விற்பனை செய்யப்படும் காய்கறி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மார்க்கெட்டில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 30, 2024

மின்சாரம் தாக்கி கேஸ் உரிமையாளர் உயிரிழப்பு

image

பண்ருட்டி பகுதியை சார்ந்த பிரபுராஜ் பிரபல கேஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று இரவு அப்பகுதியில் திடீரென மழை பொழிந்த நிலையில் வெளியில் சென்று வீடு திரும்பிய பிரபுராஜ் தனது வீட்டில் வெளியில் இரும்பு கேட்டை திறந்த பொழுது எதிர்பாராத மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!