India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் இயற்கை முறை விவசாயம் அதிக அளவு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசாங்கம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து ஒரு லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு பெற சம்பந்தப்பட்ட வட்டார அலுவலக மாவட்ட தோட்டக்கலை அலுவலங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ளதால் அக்டோபர் மாத சம்பளத்தை பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கடலூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இது குறித்து முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் போனஸ், தீபாவளிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாத நிலையில் சம்பளத்தை முன்னதாக வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவிக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது என்ஜினியரிங் மாணவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் கடலூர் வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த வி.சித்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கண்ணன் (28). நேற்று இவர் குடிபோதையில் தொழுதூரில் உள்ள மோகினி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டத்தின்கீழ் 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே தகுதியான பயனாளிகள் அரசு கால்நடை நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்/ கால்நடை உதவி மருத்துவர்களிடம் நேரில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
திட்டக்குடி அடுத்த வடக்கு விருதாங்கால் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி தமிழரசி (37). இவர் குலதெய்வ கோயிலுக்கு பொங்கல் வைக்க தாமதமாக சென்றதால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் புகழேந்தி, தமிழரசியை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த தமிழரசி, நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஞாயிறு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டு திடலில் மொழிப் போர்த்தியாகி அஞ்சலை அம்மாள் “கட் அவுட்” இடம் பெற்றிருப்பது கவனத்தை பெற்றுள்ளது. அஞ்சலை அம்மாள் கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தென்னிந்திய ஜான்சி ராணி என காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர். SHARE IT.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு தினம் தோறும் மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.,25) மணிலா வரத்து 8.79 மூட்டை, நெல் (ஐ.ஆர்-50) வரத்து 3.38 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த விளை பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
கடலூர் மாவட்டம் நல்லூரில் உள்ள சாந்தி மஹாலில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலா் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சசிதரன், சம்சத்பேகம், வருவாய் ஆய்வாளர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.