Cuddalore

News March 19, 2026

கடலூர்: இனி வரி செலுத்துவது எளிது.!

image

கடலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக<> https://vptax.tnrd.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

கடலூர் முழுவதும் 403.8 மி.மீ மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று (மார்ச் 19) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 403.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் புவனகிரி 67 மில்லி மீட்டர், கடலூர் 54 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 52 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 42 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News March 19, 2026

கடலூர்: 33,534 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு!

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 13,155 மூத்த குடிமக்கள், 20,379 மாற்றுத்திறனாளிகள் என 33 ஆயிரத்து 534 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்த படியே தபால் வாக்குகளை செலுத்துவதற்கான விருப்ப படிவம் நாளை 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

கடலூர்: வங்கி வேலை! – கடைசி வாய்ப்பு!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

கடலூர்: ஆன்லைன் மின் கட்டண சேவை நிறுத்தம்

image

கடலூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கணினி சர்வர் மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் கணினி வசூல் மையங்களில் நாளை மறுநாள் (21.3.2026) காலை 6 மணி முதல் 22-ந் தேதி இரவு 12 மணி வரை ஆன்லைன் மின்கட்டண சேவை செலுத்த இயலாது என, கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சரவண துரைமோகன் தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.92 லட்சம் இழப்பீடு

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியராக பணிபுரிந்தவர் பாபு. இவர் கடந்த 2018 ம் ஆண்டு தில்லைநாயகபுரம் பகுதியில் ஆட்டோவில் செல்லும்போது பள்ளி பேருந்து மோதி உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு, கடலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து ரூ.92,07,954 வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

News March 19, 2026

கடலூர்: அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில், 2026- சட்ட மன்ற தேர்தல் பணி குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான சி.வே.கணேசன் தலைமையில் ஒன்றிய, நகர, பேரூர், திமுக செயலாளர்களுடன் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!