India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் மட்டுமே இயக்கப்படும், தாம்பரம் செல்லாது என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகரப் போக்குவரத்து காவல்துறை வழங்கிய பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிஞ்சிப்பாடி வட்டம் ரங்கநாதபுரம், விருப்பாச்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 39 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியரால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் வருவாய்த்துறை அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் ரூ.78,000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26 வயதுக்குள் இருக்கும் தகுதியானவர்கள் இங்கு <
சிதம்பரத்தில் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று சிதம்பரம் நகரப் பகுதியில் உள்ள தில்லை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் திருமண தடை நீங்க சம்பங்கி மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இக்கோயில் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 28-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (27/02/2025) வியாழக்கிழமை இரவு மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான குளோபல் அறக்கட்டளை சிறந்த பெண் ஆளுமைகளுக்கான குளோபல் சிறப்பு விருதுகள் 2025 வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை <
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.