India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி எம்பிரான்(65). இவரின் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது காணாமல் போனதால் மனமுடைந்தார். இதனால் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் விளைவாக மன உளைச்சல் அதிகமானதால் எம்பிரான், கண்டப்பன்குறிச்சி மயானப் பாதையில் உள்ள மின்மாற்றியின் மீது ஏறி, மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடலூரில் ஆயுத பூஜையை வினோதமான முறையில் கொண்டாட முடிவு செய்த இளைஞர்கள் சிலர், எம்.புதூர் விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலையில் மிகவும் ஆபத்தான வகையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டூவீலர் சாகசத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் தலைமை நர்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். அதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<

கடலூர் உழவர் சந்தையில், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு காய்கறி மற்றும் பழங்களின் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் (செப்.30 – அக்.2) சுமார் 80 டன் அளவுக்கு காய்கறிகள், 19 டன் அளவுக்கு பழங்கள் என மொத்தம் 99 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

சிதம்பரம் நகர போலீசார் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் பூதக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பாபு ( 22), ஹர்ஷத் அகமது (20), முகமது சப்ருதின் (19) ஆகியோரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் அருகே சர்வராஜன்பேட்டையை சேர்ந்தவர்கள் அருள் செல்வம் (53), பொற்செழியன் (52). இவர்கள் நேற்று முன்தினம் பைக்கில் எள்ளேரி மேம்பாலத்தில் சென்றபோது அந்தவழியாக வந்த லாரி மோதியதில், 2 பேரும் தூக்கி வீசபட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி வேல்முருகன் (38). இவரது மனைவி வள்ளி. வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு வருவதால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வள்ளி, வீட்டிற்குள் இருந்த சில்வர் குடத்தை எடுத்து தலையில் தாக்கி வேல்முருகனை கொலை செய்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(அக்.2) இரவு 10 மணி முதல் இன்று (அக்.3) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.