India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இந்த சிறப்பு மெமு ரயில் (06007) நாளை அதிகாலை 12.15 புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6.50 சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் வழியாக தஞ்சாவூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் மையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானம் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதி. வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும், மேலும் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ஏழுமலை (52). இவர் இன்று இரவு 7.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சென்னை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கிய ஏழுமலை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்தவர் சேட்டு (60). இவர் இன்று அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தை மிஷின் மூலம் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக தென்னை மரம் சாய்ந்து அவர் மீதே விழுந்தது. இதில் சேட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலை தேர்வு 14.9.2024 அன்று நடந்த நிலையில், முதன்மை தேர்விற்கான தமிழ் தகுதித்தேர்வு, எழுத்து தேர்வு, கொள்குறிவகை எழுத்து தேர்வு ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சலவை தொழிலாளர்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு தேய்ப்பு பெட்டி வழங்கப்பட உள்ளது. இந்த தேய்ப்பு பெட்டிகளைப் பெற கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாமென கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2ஆம் நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 23.10.2024 அன்று கடலூர், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று இரவு தீக்ஷதர்கள் கிரிக்கெட் விளையாடியதாகவும் அதை வல்லம்படுகை சேர்ந்த வி.சி.க முகாம் செயலாளர் இளையராஜா செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய ஐந்து தீக்ஷதர்கள் மீது சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் மணிகண்டன் இவர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பிளஸ்2 படிக்கும் 17 வயதுடைய மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், மாணவியை, மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மணிகண்டனை கைது செய்தனர்
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (07/10/2024) கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் பொட்டா, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.