Cuddalore

News October 13, 2024

நெய்வேலியில் 3 போலீசாரை சஸ்பெண்டு செய்த எஸ்.பி.

image

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியதில் ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த ஏட்டு சுதாகர், எழுத்தர் ஜோசப் ஆகியோர் ஆவணங்களை திருத்தி இன்ஸ்பெக்டர் கையெழுத்தை அவருக்கு தெரியாமல் போட்டு, சீல் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டனர். இதையடுத்து சுதாகர், ஜோசப் மற்றும் உடந்தையாக இருந்த தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சங்குபாலன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ராஜாராம் உத்தரவிட்டார்.

News October 13, 2024

சீன பட்டாசுகள் விற்பனை செய்த 2 பேர் கைது

image

விருத்தாசலம் போலீஸ் எஸ்.ஐ. சந்துரு மற்றும் போலீசார் இன்று காலை முல்லா தோட்டம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அனுமதி இன்றி சீன பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜா ராமன் மகன் ஹரிபிரசாத் (42), கேப்சிங் மகன் ஹர்சன் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News October 13, 2024

சுரங்கநீர் வெளியேறும் இடத்தை ஆட்சியர் ஆய்வு

image

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் சுரங்கத்தில் இருந்து மேல்பரவனாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரவனாறு வழியாக நீர் வெளியேற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அவர்கள் இன்று (12.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

News October 13, 2024

ரூ.500-க்கு மீன் கேட்டு மீனவரை தாக்கியவர் கைது

image

கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ் (44). மீனவரான இவர் இன்று கடலில் பிடித்து வந்த மீனை, அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின்(50) என்பவர் 500 ரூபாய்க்கு கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மீன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே ஸ்டாலின் தனது உறவினர்களுடன் சேர்ந்து சுரேசை தாக்கினார். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.

News October 12, 2024

என்எல்சி அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்திலிருந்து நீர் வெளியேற்றுவதற்கான வடிகால் அமைப்புகள் குறித்தும் மற்றும் மழை பொழிவிற்கு ஏற்ப தகுந்த முறையில் நீர் வெளியேற்றுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அவர்கள் தலைமையில் என்.எல்.சி நிர்வாகிகளுடன் இன்று (12.10.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News October 12, 2024

மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றவர் கைது

image

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ. சிவராமன் மற்றும் போலீசார் கிளிமங்கலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் (55) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 26 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News October 12, 2024

பூட்டிய வீட்டில் நகைகள் திருடிய நபர்கள் கைது

image

நெல்லிக்குப்பம் ரஹ்மான் நகரைச் சேர்ந்த பாபு என்பவர் குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 2லட்சம் மதிப்புள்ள நகைகள் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பெரிய சோழ வள்ளி சேர்ந்த குப்புசாமி மகன் சிற்றரசு(22) ,சரவணன் மகன் நித்திஷ் (19)ஆகியோரை நேற்று போலிசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News October 12, 2024

கடலூரில் வாய்க்காலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை கடலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அனு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News October 11, 2024

கடலூரில் வாய்க்காலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை கடலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அனு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News October 11, 2024

கடலூர் ரேஷன் கடையில் பணிபுரிய வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளருக்கான (Salesman) 152 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbmyt.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.