Cuddalore

News August 9, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றிரவு, கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் உதவி ஆய்வாளர் மகேஷ், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 9, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதகாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 9, 2024

கடலூர் மாவட்ட மழை அளவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 12 செ.மீ, புவனகிரி 11 செ.மீ, சிதம்பரம், வேப்பூர் தலா 8 செ.மீ, காட்டுமைலூர் 7 செ.மீ, அண்ணாமலை நகர், பண்ருட்டி, சிதம்பரம், குப்பநத்தம் தலா 3 செ.மீ, பரங்கிப்பேட்டை, மே.மாத்தூர் தலா 2 செ.மீ, விருத்தாசலம், கீழ்ச்செருவாய் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

News August 9, 2024

கடலூர் வழியாக திருச்சிக்கு இரவு சிறப்பு ரயில்

image

தாம்பரத்திலிருந்து இன்று இரவு கடலூர் வழியாக திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்திலிருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் பண்ருட்டி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம் வழியாக திருச்சிராப்பள்ளிக்கு நாளை (10/08/2024) காலை 6.40 மணிக்கு சென்றடையும் என்று சதர்ன் ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் சுற்றுலா தொழில் முனைவேர்களை ஊக்குவிக்கும் விதமாக, 48 விருதுகள் 17 வெவ்வேறு பிரிவுகளில் 27.9.2024 அன்று சென்னையில் வழங்கப்படும் எனவும், மேலும் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து 20.8.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News August 9, 2024

அமைச்சரை சந்தித்த கடலூர் ஆணையர்

image

கடலூர் மாநகராட்சி புதிய ஆணையாளராக அனு ஐ.ஏ.எஸ் சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில், கடலூர் ஆணையாளராக பொறுப்பேற்ற அனு, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது,
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உடன் இருந்தார்.

News August 9, 2024

கடலூரில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடக்கம்

image

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோயம்புத்தூரில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்தை கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் இன்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தனர்.

News August 9, 2024

அறுந்து கிடந்த மின் கம்பி சீரமைப்பு

image

குறிஞ்சிப்பாடி வட்டம் டி.பாளையம் மெயின் சாலை அருகே உள்ள விவசாய நிலத்தில் மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி ஒன்றி அறுந்து கிடந்ததை சரி செய்த வேண்டும் என இன்று காலை செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக மின் கம்பி அறுந்து கிடக்கும் இடத்திற்கு வந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

News August 9, 2024

திட்டக்குடி அமைச்சர் முதல்வருக்கு நன்றி உரை

image

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் துவக்கி வைத்த
தமிழ்நாட்டின் தவப்புதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

கடலூர் விஜிலென்ஸ் ஆணையருக்கு பதவி உயர்வு

image

தமிழ்நாட்டில் தஞ்சை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 24 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த முத்தமிழ் சென்னை முதன்மை கண்காணிப்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

error: Content is protected !!