Cuddalore

News August 11, 2024

கடலூரில் ரூ.10க்கு தங்கும் விடுதி

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுடன் வரும் நபர்கள் தங்குவதற்காக, மருத்துவமனை வளாகத்தில் தங்கும் விடுதி, நாள் ஒன்றுக்கு ரூ.10க்கு வழங்கப்படுகிறது. இதில் தங்குவதற்கு, நோயாளியுடன் தங்குபவரின் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவரின் ஓ.பி சீட்டு நகலை சமர்ப்பிக்க வேண்டுமென மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News August 11, 2024

கடலூர் வழியாக அஹமதாபாத் ரயில் சேவை

image

திருச்சி-அஹமதாபாத் விரைவு ரயில் ஆகஸ்ட் 18 வரை சிதம்பரம், கடலூர் துறைமுகத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 29 வரை நீட்டிக்கபட்டுள்ளது. அதன்படி திருச்சியில் காலை 5.40 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு 9.32 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் அஹமதாபாத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு மறுநாள் காலை 9.30 மணிக்கு வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

News August 11, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்றைய காலை நிலவரப்படி பண்ருட்டியில் 73 மில்லி மீட்டர் மழையும், வானமாதேவியில் 25.4 மில்லி மீட்டர், கடலூரில் 11.2 மில்லி மீட்டர், எஸ்.ஆர்.சி. குடிதாங்கியில் 9 மில்லி மீட்டரும், வடகுத்தில் 2 மில்லி மீட்டரும், சிதம்பரத்தில் 1 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

News August 11, 2024

விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சுற்றுலா தொழில் முனைவோர், விருது பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சுற்றுலா துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகள் உலக ‘சுற்றுலா தின விழா அன்று வழங்கப்பட உள்ளது. www.tntourismawards.com என்ற தளத்தில் வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 10, 2024

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த வாரம் 42 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்ததும், அங்கிருந்து வடவாறு வழியாக வீராணத்திற்கு திறக்கப்பட்டது. இதனால் படிப்படியாக உயர்ந்து இன்று வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.

News August 10, 2024

பண்ருட்டி எம்.எல்.ஏ. அறிக்கை வெளியீடு

image

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவத்திற்கான நீட் தேர்வினை தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக அமைக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 10, 2024

8,426 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ் புதல்வன் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முதற்கட்டமாக 500 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 8,426 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

News August 10, 2024

கடலூர் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை

image

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 2024–25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 13ஆம் தேதி நடக்கிறது. இதில் மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும். இதற்காக இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண்களை மாணவர்கள் தாங்கள் விண்ணப்பித்த துறைகளில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் 14ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

News August 10, 2024

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்: சிதம்பரம் பள்ளி தாளாளர் கைது

image

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சிதம்பரம் தனியார் பள்ளித் தாளாளர் அருள்ராஜ் என்பவரை சென்னை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். சதீஷை பழிவாங்க அவரது பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு அருண்ராஜ் கொலை மிரட்டல் கடிதம் எழுதினாராம். இதுகுறித்த விசாரணைக்கு சென்னை தனிப்படை போலீஸார், அருண்ராஜை கைது செய்தனர்.

News August 10, 2024

கடலூர் அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

image

கடலூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் 25 ரூபாய்க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதை https://www.cpostolics.gov.in இணையதளம் மூலமும், அருகில் உள்ள அஞ்சலகங்களில் நேரில் சென்றும் வாங்கலாம். ஷேர் செய்யவும்

error: Content is protected !!