India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவாவும் (25) காதலித்து வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அந்த சிறுமியுடன் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் சிவா மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT!

சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரியை சேர்ந்தவர் பாலாஜி மகள் பவித்ரா (8). அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் பவித்ரா நேற்று(பிப் 21) அதே ஊரில் உள்ள நிலத்திற்கு தனது தாத்தா கருணாநிதியுடன் சென்றார். அப்போது அங்குள்ள குளம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா, திடீரென குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாள். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அடுத்த சி.முட்லூரை சேர்ந்தவர் வள்ளி(60). இவர் சிதம்பரத்தில் இருந்து வடலூருக்கு பஸ்சில் செல்லும் போது, 2 பெண்கள் அவரிடம் இருந்த 7 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்குபதிந்து நகைகள் திருடிய கிருஷ்ணகிரி மாவட்டம், தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள்(60), பசவராஜ் மனைவி நேத்ரா(33) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் இன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி கடலூர் தொகுதியில் சரசு, நெய்வேலி வீரமணி, பண்ருட்டி பானுப்பிரியா, குறிஞ்சிப்பாடி கவிதா ரங்கநாதன், புவனகிரி சுமதி சீனிவாசன், திட்டக்குடி மகாலட்சுமி, விருத்தாசலம் ஆனந்தி, சிதம்பரம் தமிழ், காட்டுமன்னார்கோவில் சிவஜோதி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

“உலகெங்கும் வாழும் தமிழினச் சொந்தங்களுக்கும், தமிழை நேசிக்கின்ற சொந்தங்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான தி. வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <

கடலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

கடலூர் மாவட்டத்திற்கு திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடலூரில் கடந்த சில நாட்களாக பூண்டு விலை கிடுகிடுவென உயரத்தொடங்கி உள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ நாட்டு பூண்டு முதல் ரகம் ரூ.200-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது முதல் ரகம் ரூ.320-க்கும், 2-ம் ரகம் ரூ.300-க்கும், 3-ம் ரகம் ரூ.260-க்கும் விற்பனையாகிறது.

கடலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<
Sorry, no posts matched your criteria.