Cuddalore

News August 14, 2024

கடலூரில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள்

image

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடலூரில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள் 4 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ?

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கடலூர் காவலருக்கு சிறப்பு பதக்கம்

image

இந்தியாவின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணை கண்காணிப்பாளர் ச.சௌமியாவுக்கு நாளை சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது.

News August 14, 2024

உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

image

நெல்லிக்குப்பம் பள்ளமேட்டு தெருவை சேர்ந்த ஜோதி என்பவர் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ஜோதியின் உடலுக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.

News August 14, 2024

பண்ருட்டி எம் எல் ஏ அறிக்கை வெளியிடூ

image

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், வருகின்ற மழைக்காலத்தில் பணிக்கு வருவதற்கு ஏதுவாக ரெயின் கோட் விரைந்து வழங்க வேண்டும் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எம்எல்ஏ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News August 14, 2024

அணிவகுப்பு ஒத்திகையை பார்வையிட்ட அதிகாரிகள்

image

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் சுதந்திர தின போலீஸ் ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர். அப்பொழுது வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்

News August 14, 2024

கடலூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்தும் இன்று மற்றும் வரும் 19ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். செங்கல்பட்டிலிருந்து மாலை 5.55க்கு புறப்படும் இந்த ரயில் (06019) பண்ருட்டிக்கு இரவு 08.05க்கு வந்து திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 5.50க்கு செல்லும்.

News August 14, 2024

கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர், செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகம் மூலம் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும் என கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2024

கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

தென்னக ரயில்வே சார்பில், அகமதாபாத்தில் இருந்து கடலுார் வழியாக திருச்சிக்கு வரும் 22 ஆம் தேதி முதல், டிச. 26 ஆம் தேதி வரையில், வியாழக்கிழமைகளில் வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் வரும் 22, 29-ஆம் தேதிகளிலும், செப்டம்பரில் 5, 12, 19, 26, அக்டோபரில் 3, 10, 17, 24, 31, நவம்பரில் 7, 14, 21, 28, டிசம்பரில் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

News August 14, 2024

கடலூர்: 350 காவலர்கள் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்ட எஸ்.பி. இராஜாராம், மாவட்டத்திற்குள் ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்பட 350 பேரை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!