India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில், புதிதாக மனமகிழ் மன்றம அமைக்கப்பட்டது. அதனை இன்று(பிப்.25) கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார். இம்மன்றத்தில் காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர், சிறுவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பொது அறிவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் TNPSC தேர்வு சம்பந்தமாக புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் வருகிற மார்.2 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் 248 பள்ளிகளை சேர்ந்த 15,019 மாணவர்களும், 15,020 மாணவிகளும் என மொத்தம் 30,039 மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். இதற்காக 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

விருத்தாசலம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வமணி(28). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் மேம்பாலம் வழியாக சென்றார். அப்போது கடலூர் சாலையிலிருந்து விருத்தாசலம் திரும்பிய வட்டாட்சியர் பயணித்த ஜீப், செல்வமணி மீது மோதியதில், வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, விருத்தாசலம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

ஸ்ரீமுஷ்ணம் திருப்பணாழ்வார் தெருவை சேர்ந்தவர் மாலதி(69). இவர் வடலூர் சென்று விட்டு மீண்டும் தனியார் பேருந்தில் வீட்டிற்கு திரும்பி சென்றபோது கருங்குழி சந்திப்பில் இறங்கினார். அப்போது கழுத்தில் இருந்த 3.5 சவரன் தாலி செயினை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும். இதுகுறித்து வடலூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நேற்கொண்டுள்ளனர்.

கடலூர் சிப்காட் அடுத்த வைரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(21). இவர் மீது கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் நேற்று சுதாகர் குண்டாஸில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி 24) இரவு 10 முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.