India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடுவீரப்பட்டை அடுத்த வான்ராசன் குப்பத்தைச் சேர்ந்தவர் சுதாகர்(35). கூலித் தொழிலாளியான இவரும் புகழரசன்(26) என்வரும் நேற்று கடலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது வாழப்பட்ட அருகே வந்தபோது, லாரி மோதியதில் சுதாகர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் படுகாயத்துடன் புகழரசன் கடலூர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

ஆதிவராக நல்லூர் சேர்ந்த தம்பதியினர் ராகுல் காந்தி(29), ஐஸ்வர்யா(24). குடும்ப பிரச்சினைகள் ஐஸ்வர்யா கோபித்துக் கொண்டு பு. முட்லூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை அழைக்க சென்ற ராகுலை மாமனார் செல்வம், மைத்துனர் ஆகாஷ், மாமியார் கலையரசி ஆகியோர் கத்தியால் வெட்டி, ஆபாசமாக திட்டி உள்ளனர். இதுகுறித்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று 3 பேர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே இ- நாம் 1 பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இ- நாம் 02 (e-NAM) இணையமாக மாற்றப்பட்டுள்ளது. இனி வேளாண் பொருட்கள் பரிவர்த்தனை இதன் மூலமே நடைபெறும். விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இ- நாம் 02 ல் பதிவு செய்து விளைப் பொருட்களை விற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் (பிப்.26) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

கடலூர் மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. <

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (27.2.2026) விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் நாளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மங்கலம்பேட்டை அருகே விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் திவாகர்(13) தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருந்துள்ளார். இவர் நேற்று(பிப்.25) இரவு நண்பர்களுடன் சுற்றி உள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு சென்றால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து இன்று அதிகாலை பூவனூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

கடலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <

கடலூர் மாவட்டத்திலுள்ள 23 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக நாளை முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.