Cuddalore

News August 20, 2024

கடலூரில் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி

image

கடலூரில் நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்புடான் உயர் கல்வி தேர்வு முகாம் இன்று நடைபெறுகின்றது. இதில் 12ஆம் வகுப்பில் 75% மேல் வாங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தில் வேலைவாய்ப்புடான் உயர் கல்வி வழங்கப்படவுள்ளது. இத்தேர்வு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://registrations.hcltechbee.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News August 19, 2024

கடலூர் மாவட்டத்தின் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (19/08/2024) கடலூர் 32 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 34 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 35 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 34 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News August 19, 2024

835 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 835 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வுகாண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 19, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (19/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சந்துரு, நெய்வேலி காவல் ஆய்வாளர் உதயகுமார், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக முதல்வரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் HCLTech நிறுவனம் இணைந்து நடத்தும் TechBee எனும் ‘பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி தேர்வு முகாம்’ – கடலூர் சி.கே.பள்ளி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளிகளில் நாளை 20-ம் தேதி நடக்கிறது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 19, 2024

கடலூர்: மூட்டையில் மனு

image

பண்ருட்டி அருகே அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் இன்று தான் ஏற்கனவே அளித்த மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் அக்கடவல்லி ஊராட்சியில் ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News August 19, 2024

கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

image

கடலூர் துறைமுகத்தில் நேற்று மீன்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு குவிந்தனர். 1 கிலோ வஞ்சிரம் 1000 ரூபாய்க்கும், சங்கரா 400 ரூபாய், கனவாய் 300 ரூபாய், இறால் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

News August 18, 2024

கடலூர் மாவட்டத்தின் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று (18/08/2024) கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 33 டிகிரி செல்சியஸ், புவனகிரி 33 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 33 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 35 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News August 18, 2024

கடலூர்: இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (18/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் குமாரசாமி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி உதவி ஆய்வாளர் டைமன்துரை, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தற்போது கடலூர் மாவட்டத்தில் மாலை 5 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!