India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முடசலோடை மீனவர் கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன் இறக்குவதற்கு கூடுதல் வசதிகள் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியை மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மகேஷ் கூறினார். கடலுாருக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் மகேஷ், பள்ளிகளில் ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆசிரியர்கள் மூலம் 1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டும், 800 டாக்டர்கள் மூலம் மனநலம் ஆலோசனை வழங்கப்பட்டும் வருகிறது என்றார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் எண்:கடலூர் : 94981 52946 சிதம்பரம்: 94981 14281 விருத்தாசலம்: 96007 83600, நெய்வேலி: 94981 06200, சேத்தியாத்தோப்பு: 97879 43502, பண்ருட்டி: 94981 34556
காட்டுமன்னார்குடி அருகே பேரூர் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான பணிகள் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேளாண்மை மற்றும் முழுவதும் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (20/08/2024) கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 32 டிகிரி செல்சியஸ், புவனகிரி 32 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 32 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 35 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 35 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 35 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாத்தா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் தனசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட்.20) காலை நிலவரப்படி கீழ்செருவாய் 4 செ.மீ., லக்கூர் 3 செ.மீ., வேப்பூர் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தின் போது பக்தர்களை கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில், ஆறு கால பூஜையை தவிர்த்து மற்ற நேரங்களில் பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடலூர், மஞ்சக்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திமுக கடலூர் மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் உள்ளனர்.
நாடு முழுவதும் தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 233 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.