India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி சிறு நாகலூரைச் சேர்ந்த மணிராஜிக்கும்(24), வடலூரைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும்(21) 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 5 மாத கைக்குழந்தையும் இருந்தது. இந்நிலையில், குழந்தையின் காதில் சீழ் வடிந்ததால், சாக்கடையில் வீசி கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியுள்ளார் ராஜேஸ்வரி. இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி போலீசார், கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி காட்டுமன்னார் கோயிலில் 19 மில்லி மீட்டர் மழையும், கீழ்செருவாயில் 10 மில்லி மீட்டர், லால்பேட்டை, மே.மாத்தூரில் 9 மி.மீட்டர், வடக்குத்தில் 4 மில்லி மீட்டர், கடலூரில் 3.4 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
சிதம்பரம் காட்டுமன்னார்குடி செல்லும் பேருந்து நேற்று ஓமக்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது டிரைவர் செல்வகுமார் பிரேக் பிடித்துள்ளார். கண்டக்டராக பணியாற்றிய பாஸ்கர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர், சிதம்பரம் கிள்ளை ரயில்வே மார்க்கத்தில் இன்று அதிகாலை கோவிலாம்பூண்டியில் ரயிலில் அடிபட்ட ஒரு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர், சிதம்பரம் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட வடிவாக்கால் பகுதியில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக அப்பகுதி மக்களிடையே புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நீர்வள கொள்ளிட வடிவாய்க்கால் செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் விசாரித்து நேற்று மாலை தனி நபர்கள் கட்டியுள்ள 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்தனர்.
திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் விதம் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.
திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் விதம் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் இன்று விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்து விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் சரண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (21/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தார். பின்னர் அவர், மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.