India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா மேம்பாலம் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (ஆக.26) மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.அனு மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, பண்ருட்டியில் உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் நேற்று கட்சிக் கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலுக்கு நேரில் சென்று விஜய பிரபாகரன் இன்று அஞ்சலி செலுத்தினர். அப்போது வெங்கடேசனின் 2 மகன்களின் கல்விச் செலவைத் தேமுதிக ஏற்கும் என விஜய பிரபாகரன் கூறினார்.
புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தனது வலைத்தள பக்கத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் “புளுகு மூட்டை” அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலுாரில் புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு பதிலாக பாதிரிக்குப்பத்தில் அமைக்க முடியுமா என கலெக்டர் பார்வையிட்டார். புதிய பேருந்து நிலையம் எம்.புதூரில் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருவதால் வேறு இடத்தில் அமைக்க முடியுமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது, அதையொட்டி பாதிரிக்குப்பத்தில் உள்ள பெருமாள் கோவில் இடத்தை கலெக்டர் தலைமையில், வருவாய் அலுவலர், தாசில்தார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம், அழகியநத்தம் இரண்டாயிரம் விளாகம் பகுதிகளில் தென்பெண்ணையாற்றில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (25.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.
கடலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனம், கடலூர் சார்பில் 39-வது தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு முகாம் இன்று முதல் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இது தொடர்பான விளம்பர பேனர்கள் மருத்துவமனை வாயிலில் இன்று இரவு வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (25/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் நொச்சி காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பட்டாசுகள் தயாரிக்க உரிய அனுமதியின்றி 200 கிலோ வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (38), அவரது தாய் ஞான சௌந்தரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து ஞான சௌந்தரியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேசை தேடி வருகின்றனர்.
கடலூர் பண்ருட்டி அருகே விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க http://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 2-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.