India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை, மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2313 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை, மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2313 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கீரமங்கலத்தை சேர்ந்தவர் ஞானகுரு என்பவரது மனைவி தமிழரசி (22). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த தமிழரசி நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள கீற்றுக்கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் மற்றும் ஓவிய பயிற்சிப் பட்டறை வருகிற 7ம் தேதி அன்று நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் நாளை (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

கடலூர் மக்களே,<

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.