India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பண்ருட்டி, காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த சுந்தரவேலு(23), மற்றும் மேல்மாம்பட்டை சேர்ந்த ராஜஸ்ரீ(19) 2பேரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, ராசாபாளையத்திற்கு சென்றனர். அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மயங்கி கிடந்தவர்களை மீட்டு பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காடாம்புலீயூர் போலீசார் விசாரணை.

கடலூர், காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (மார்.4) இரவு 10 மணி முதல் நாளை (மார்.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் அருகே உள்ள கட்சிபெருமாநத்தைச் சேர்ந்த சிவ சங்கரமூர்த்தி (41) என்பவர் தன்னுடைய ஈச்சர் டிராக்டர் வாகனத்தில் (மார்ச்.4) வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
மேமாத்தூர் அருகே செல்லும்போது திடீரென எதிர்பாராத விதமாக வைக்கோல் தீப்பிடித்து எறிந்ததில் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காவல் அலுவலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் தலைமையில், இன்று(மார்.4) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகள் தீர்வு காண உத்தரவிட்டார்.

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <

கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்.1ஆம் தேதி முதல் இன்று மார்.4ஆம் தேதி வரை இயல்பாக 2.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 0 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 100 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கு மாவட்டம் முழுவதும், 2 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 34 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூபாய் 436 கோடி வரவு வைக்கப்பட்டதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.