India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி வேப்பூரில் 54 மி.மீ மழையும், கீழ்செருவாயில் 29 மி. மீ, மே.மாத்தூரில் 28 மி.மீ, பெலாந்துறையில் 24.2 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 23.2 மி.மீ, கடலூரில் 19.1 மி.மீ, குறிஞ்சிப்பாடியில் 18 மி.மீ மழை பதிவாகியது.
மத்திய சிறையில் நேற்று சிறை காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது முதல் பகுதி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனை அருகில் உள்ள கட்டிடத்தில் கிடந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் பலத்த பாதுகாப்பு மீறி சிறை மருத்துவமனை கட்டிடத்தில் கஞ்சா பொட்டலம் எப்படி வந்தது என்பது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் நடந்த 135 திருட்டு சம்பவங்களில் 118 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரவுடிகளை கட்டுப்படுத்த சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையினர் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்.பி. ராஜாராம் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி மார்க்கெட் பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (29.08.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு விற்பனை செய்யப்படும் காய்கறி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மார்க்கெட்டில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பண்ருட்டி பகுதியை சார்ந்த பிரபுராஜ் பிரபல கேஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று இரவு அப்பகுதியில் திடீரென மழை பொழிந்த நிலையில் வெளியில் சென்று வீடு திரும்பிய பிரபுராஜ் தனது வீட்டில் வெளியில் இரும்பு கேட்டை திறந்த பொழுது எதிர்பாராத மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ம் நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விருதாச்சலம் நகர் மன்ற தலைவர் அன்புமணி முருகதாஸ் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரை சந்தித்தார். சந்திப்பின் போது நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் உடனிருந்தனர்.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இன்று மணிலா வரத்து 120 மூட்டை, நெல் வரத்து 3100 மூட்டை, எள் வரத்து 140 மூட்டை, உளுந்து வரத்து 25 மூட்டை, கம்பு வரத்து 20 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 20 மூட்டை, தேங்காய் பருப்பு 10, தட்டை பயிர் 1 மூட்டை என மொத்தம் 3436 வந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 20224 ஆம் ஆண்டிற்கான 1330 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கு பெறலாம், மேலும் கடலூர் ஆட்சியரகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் தங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அஞ்சல் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவராக இருக்க வேண்டும். அஞ்சல்தலை தொடர்பான எழுத்து வினாடிவினா வருகின்ற செப்.28ஆம் தேதி நடத்தப்படும். இதற்கு விண்ணப்ப http://tamilnadupost.cept.gov என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் சந்தித்து அவர்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனை வளாகம் என மருத்துவமனை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.