Cuddalore

News September 7, 2024

கடலூர் மாவட்டத்தில் 14ஆம் தேதி லோக் அதாலத்

image

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்ப, தொழிலாளர் நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரே நாளில் தீர்வு காணப்படுகிறது. இதனால் வழக்குகளால் ஏற்படும் கால, பண விரயங்கள் தவிர்க்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படும்.

News September 6, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் காவல்துறை சார்பில் ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

image

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதில் முல் அரும்பு 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாமந்திப்பூ 400 ரூபாயும், பன்னீர் ரோஸ் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஏராளமான பொதுமக்கள் பூக்களை வாங்கிச் சென்றனர்.

News September 6, 2024

கடலூர் மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12.9.2024 அன்று கடலூரில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரிலோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் வருகிற 11-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 5, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (05/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் உத்திரம்மாள், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரேவதி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

சிதம்பரம் கோயில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 2014 – 2024ஆம் ஆண்டு வரையிலான வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் பராமரிப்புக்கும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News September 5, 2024

கடலூர் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

image

கடலூர் உழவர் சந்தை எதிரில் நடைபாதை வியாபாரிகள் சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து அங்கு சென்ற கடலூர் போக்குவரத்து போலீசார், ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நடைபாதையில் கடை வைத்திருந்தவர்களிடம் பேரிகார்டுகளுக்கு வெளியில் கடைகளை வைக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

News September 5, 2024

வகுப்பறை கட்ட இடம் தேர்வு: ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (4.9.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 5, 2024

கடலூரில் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா கோ.சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து பார்வையிட்டதோடு, கணினி ஆய்வகத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அவர்கள் நேற்று (செப்.04) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 5, 2024

கல்வி நிறுவனகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 31.1.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!