India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2) குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4) 100 சதவித முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம்
5) <
6) மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம். (SHARE)

கோவை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் நேற்று அலங்காரம்மன் கோயில் அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அஜித்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். அப்போது தடுக்க வந்த அஜித்தின் நண்பர் மற்றும் அவரது மகளையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பெயரில், சச்சின் (எ) நவீன் குமார், மோகன் குமார் (எ) மொக்கை மோகன் மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.

கோவையில் இன்று (ஜன.27) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், நெகமம், கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், அரசூர், கோமங்கலம், சீலக்காம்பட்டி, செட்டிபாளையம், கோலார்பட்டி, பெதப்பம்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், மூலனூர், கொங்கல்நகரம், எஸ்.அம்மாபட்டி, எல்லப்பநாயக்கனூர் பகுதியில் இன்று காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும்.

கோவை மாவட்டத்தில் இன்று (26.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

கோவை மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)

தேனியைச் சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் பீளமேடு பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது பைக்கில் உக்கடத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பீளமேடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது உக்கடத்தில் சாலையோர தடுப்பில் பைக் மோதியது. இதில் நிரஞ்சன் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.