Coimbatore

News January 28, 2026

கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (28-01-2026) மாலை 06:30 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். இதனை முன்னிட்டு, திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் V.செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின்படி, அவரை வரவேற்க கோவை மாவட்ட திமுக சார்பில், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 28, 2026

ரயில் நிலையம் ஏர்போர்ட் போல மாற போகுது

image

கோவை ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்ற ₹692.65 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட பணிகள் தொடங்குகின்றன. தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த இத்திட்டத்தில், விமான நிலையம் போன்ற வசதிகளுடன் 3 அடுக்கு மாடி முனையம் அமையவுள்ளது. கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் சுரங்கப்பாதை மற்றும் பார்க்கிங் வசதிகள் செய்யப்படவுள்ளன. இந்த நவீன ரயில் நிலையம் கொங்கு மண்டலத்தின் புதிய அடையாளமாக மாறும்.

News January 28, 2026

கோவை: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

image

கோவை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

News January 28, 2026

கோவை: பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

image

சரவணம்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய வசந்தராஜ் (36) என்பவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக இச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2026

JOB ALERT கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

சூலூரில் பெண் தற்கொலை

image

வடமாநிலத்தைச் சேர்ந்த ராதா – முகேஷ் தம்பதி சூலூர் மில்லில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அப்போது, அங்கு பணிபுரிந்த மனோகரனுக்கும், ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் முகேஷ் அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனோகரனுடன் வசித்து வந்த ராதாவுடன் அவர் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 28, 2026

கோவை: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

கோவையில் 3,500 ஆண்டுகளுக்கு முன்.. அதிர்ச்சி தகவல்

image

கோவை, மோலப்பாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பழங்கால விலங்குகளின் எலும்புத் துண்டுகள் சில கிடைத்தன. இதில் ஒரு இந்திய காண்டாமிருகத்தின் நான்கு எலும்புத் துண்டுகள், இரண்டு மெட்டாகார்பல்கள் (முன் கை எலும்புகள்) மற்றும் இரண்டு மணிக்கட்டு எலும்புகள் ஆகியவற்றை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த எலும்புகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!