India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை அரசியலாக்கி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே திமுக அரசு தேவையற்ற அச்சத்தை உருவாக்கி வருவதாக கோவை MLA வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் நடத்துவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால், திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை அரசியலாக்கி வருகிறது என்றார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை அரசியலாக்கி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே திமுக அரசு தேவையற்ற அச்சத்தை உருவாக்கி வருவதாக கோவை MLA வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் நடத்துவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால், திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை அரசியலாக்கி வருகிறது என்றார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, தற்கொலை காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0422-2220351 தெரிவியுங்க. (SHARE பண்ணுங்க)

கோவை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

இடையர்பாளையத்தைச் சேர்ந்த ரோஹித் (18). இவர் தனது நண்பர் சுதர்சனுடன் (22) காரில் நேற்று சென்று கொண்டு இருந்தார். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கோவை மாவட்ட மக்கள் 0422-2449550 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <

பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா(25). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவருக்கும் கோவை தென்னமநல்லூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக்குக்கும் பழக்கமாகி காதலாகி கடந்த 12 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜீவிதா மருத்துவம் படித்திருந்தாலும் உரிய வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.