India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கணுாரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், நேற்று தென்சங்கம்பாளையம் ஆனைமலை சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பிராகாஷ் மற்றும் எதிரே பைக்கில் வந்த மணிகண்டன் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பயணிகள் வருகை அதிகரிப்பால் கோவை – ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் எண் 06181: பிப்ரவரி 5, 12, 19 (வியாழன்) அதிகாலை 2.30-க்கு கோவையிலிருந்து புறப்படும். ரயில் எண் 06182: பிப்ரவரி 8, 15, 22 (ஞாயிறு) இரவு 10.05-க்கு ஜெய்ப்பூரிலிருந்து புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களுக்குப் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.

கோவை மாவட்டத்தில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

கோவை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

நாளை தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை முருகன் கோவிலில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். துணை கமிஷனர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதேபோல் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் தேரோட்டத்திற்கும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம்–திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக பயணிகள் பயன்படுத்தி வரும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடிக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து, திங்கள்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் இயக்கப்படும். பல முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

கோவை கணபதி மற்றும் ராஜவீதி பகுதிகளில், எம்.பி நிதியிலிருந்து BSNL மூலம் இலவச வைஃபை வசதியை எம்.பி கணபதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார். தமிழகத்திலேயே முதன்முறையாக கோவையில் இத்திட்டம் அமலாகியுள்ளது. இந்த இணைய வசதியை ஒரே நேரத்தில் 500 பேர் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மொபைல் எண்ணுக்கும் தினமும் 4 மணி நேரம் இலவச அனுமதி வழங்கப்படும். OTP அடிப்படையில் பாதுகாப்பான லாக்-இன் வசதி செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.