Coimbatore

News February 2, 2026

கோவை: குறைந்த விலையில் பைக், கார்

image

கோவை மாநகர காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் பிப்ரவரி 5-ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.
ஏலத்திற்கு வரும் வாகனங்களின் விவரம்:
1) இருசக்கர வாகனங்கள்: 30
2) நான்கு சக்கர வாகனங்கள்: 3
3) மூன்று சக்கர வாகனங்கள்: 2
4) கனரக வாகனம்: 1
5) மொத்தம்: 36 வாகனங்கள் ஏலமிடப்படவுள்ளன. (ஷேர் பண்ணுங்க)

News February 2, 2026

BREAKING: உக்கடம் பாலத்தில் பயங்கர விபத்து

image

உக்கடம் மேம்பாலத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி ‘ஒன்வே’ (எதிர் திசை) பாதையில் நுழைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இவ்விபத்தில் அந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 2, 2026

கோவை: What’s App-ல் வரும் ஆபத்து!

image

கோவை காவல்துறை சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியானது. அதில், ​“Hi da… நான் WhatsApp Support பேசுறேன்” என யாராவது மெசேஜ் செய்தால், அதை நம்பாதீர்கள். இது தனிப்பட்ட விவரங்களை திருட நூதன மோசடியாகும். ​இத்தகைய மெசேஜ் வந்தால் அந்த எண்ணை பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுங்கள். வாட்ஸ்அப் மூலம் நீங்கள் ஏமாற்றப்பட்டால், அதன் இணையதளத்தில் (whatsapp.com/contact) புகார் அளிக்கலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

News February 2, 2026

கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News February 2, 2026

கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News February 2, 2026

கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News February 2, 2026

ஆலப்புழா–தன்பாத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

image

பிப்ரவரி 2-ம் தேதி ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில் (13352) வழக்கமான பாதைக்கு மாற்றாக போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இதனால் கோவை ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிற்காது. அதேபோல், பிப்ரவரி 3-ம் தேதி திருச்சி – பாலக்காடு ரயில் (16843) திருச்சி முதல் ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும். ஊத்துக்குளி – பாலக்காடு இடையே பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்

News February 1, 2026

கோவையில் கொத்தாக தூக்கிய செந்தில்பாலாஜி

image

கோவை மாநகரில் விளாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, பல்வேறு கட்சிகளில் இருந்து செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் பலர் தங்களை இணைத்து கொண்டனர். அப்போது, மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, துணை செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News February 1, 2026

கோவை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

கோவை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

News February 1, 2026

மருதமலை முருகன் பற்றி தெரியுமா?

image

மருதமலை முருகன் கோயில் முதல் முதலில் கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது, விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தல் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற பெயர்களில், 9 ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இந்த கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்துள்ளார். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.

error: Content is protected !!