Coimbatore

News October 13, 2024

கோவை மாவட்டத்திற்கு அலார்ட்

image

தமிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம் (இரவு 7 மணி வரை) கோவை மாவட்டத்தில் கனமழை பெய்ய (ஆரஞ்சு அலார்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 13, 2024

பட்டமளிப்பு விழா: கவர்னர், அமைச்சர் பங்கேற்பு

image

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் மூர்த்தி முதன்மை விருந்தினராக பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் ஆளுநா் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக உயா்கல்வி துறை அமைச்சா் கோவி.செழியன் ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அமைச்சர் கோவி.செழியன் கோவை வருகிறார்.

News October 13, 2024

கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வெளியில் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பெரும்பாலும் வெளியில் செல்பவர்கள் மழைக்கான பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

News October 13, 2024

கோவை: இன்று இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை

image

கோவை வடவள்ளி அடுத்து மருதமலை கோவில் அமைந்துள்ளது. இன்று (அக்.13) ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவு பக்தர்கள் வருவர் என எதிர்பார்ப்பதால், நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அதேநேரம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மலை படிகள் வழியாக, கோவில் பஸ் மற்றும் கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்கள் வாயிலாக கோவிலுக்குச் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

News October 13, 2024

கோவை மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மாற்றம்

image

கோவை மாவட்ட சுகாதார துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் அருணா இவரை ஈரோடு மாவட்ட சுகாதார துணை இயக்குநராக தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இவர் திங்கள்கிழமை ஈரோட்டில் பதவியேற்க உள்ளார் என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கோரோனா தொற்று காலத்தில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்தவர் என்று நற்பெயர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

News October 12, 2024

தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் வருகின்ற (15.10.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம் நடைபெற உள்ளது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று பயன்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

News October 12, 2024

எளிய பயணிகளுக்கு கட்டணம் உயராது

image

கோவை வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்து இன்று(அக்.12) வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருவதாகவும், விபத்துகளைப் பொறுத்தவரை மத்திய அரசு எச்சரிக்கையாக கையாளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

News October 12, 2024

கோவையில் வித்யாரம்பம்: கலெக்டர் துவக்கம்

image

விஜயதசமியை முன்னிட்டு தங்களது குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வி கற்பித்தலை தொடங்க பெற்றோர் முனைப்பு காட்டுவர். அந்த வகையில் கோவை ராம் நகர் ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் எனப்படும் தொடக்க கல்வி கற்பித்தல் நடைபெற்றது. இதை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தொடங்கிவைத்தார். அப்போது ஒரு குழந்தையின் கையைப் பிடித்து முதல் எழுத்தை துவக்கிவைத்தார்.

News October 12, 2024

நடந்து சென்றவர் மீது மோதிய லாரி

image

கோவை, புலியகுளம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற செப்டிக் டேங்க் லாரி சாலையோரம் நின்றிருந்த கார் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும் மோதியது. இவ்விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி மருதாசலம் என்பவர் பரிதாப உயிரிழந்தார். டிரைவர் பிரவீன் என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 12, 2024

கோவை: கடன் மீது வரிச்சலுகைக்கு வரவேற்பு

image

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குறு, சிறு நிறுவனங்களின் நடப்பு மூலதன கடனை முன்கூட்டியே கட்டி முடிப்பதற்கான கட்டணத்தின் மீதான தீர்வைக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் இந்த நடவடிக்கைகளை சீமா வரவேற்கிறது. இது பெரும் ஆறுதலை அளித்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.