Coimbatore

News October 14, 2024

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மாணவன் புகார்

image

கோவை பாரதியார் பல்கலை.யில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலை.யில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றபோது மனு அளித்தார். PhD மாணவர்களிடம் guide கள் லட்ச ரூபாய் வரை பணம் கேட்பதாகவும், ஹோட்டல்களில் விருந்து வைக்க நிர்பந்திப்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்ய சொல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 14, 2024

கோவை மாவட்டத்தில் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உள்கட்டமைப்பு) ஸ்ரீதர் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை தமிழ் இணைய கல்வி கழகத்தின் உதவி இயக்குனர் மதுரா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கலெக்டரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (கட்டாய காத்திருப்பு) பொற்செழியன் ஈரோடு மாவட்ட ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News October 14, 2024

10, +1, +2 பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் வெளியீடு

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசாங்கத்தின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை மற்றும் முடிவுகள் விவரங்களை இன்று வெளியிட்டார். உடன் கோவை மாவட்ட ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் துணை மேயர் ஆர்.வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News October 14, 2024

கோவையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளான, அவிலா கான்வென்ட் பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

News October 14, 2024

பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழா

image

பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநரும் பாரதியார் பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சரும், பாரதியார் பல்கலை இணைவேந்தருமான கோ.வி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினர். பட்டமளிப்பு விழாவில் 1622 முனைவர் பட்ட ஆய்வாளர்களும், முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 298 மாணவர்களும் தங்கப்பதக்கங்களை நேரடியாக பெற்றனர்.

News October 14, 2024

கோவை: கடந்த 24 மணி நேரத்தில் 626 மிமீ மழை

image

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு குறித்த விவரங்களை பேரிடர் மேலாண்மைத் துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில், மதுக்கரை தாலுகா 7 மிமீ, போத்தனூர் ரயில் நிலையம் 9 மிமீ, பொள்ளாச்சி தாலுகா 52 மிமீ, மாக்கினாம்பட்டி 64, கிணத்துக்கடவு 23, ஆனைமலை 1, ஆழியார் 6, சின்கோனா 23, சின்னக்கல்லாறு 23, வால்பாறை பிஏபி 53, வால்பாறை தாலுகா 5 என கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 626 மிமீ மழை பெய்துள்ளது.

News October 14, 2024

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. கலெக்டர் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று காலை மழை நின்று விட்டதால் கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

News October 14, 2024

மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் பணியிட மாற்றம்

image

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணியிடத்திற்கு, சென்னையில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தின் உதவி இயக்குனர் மதுரா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கலெக்டரின் முன்னாள் நேர்முக உதவியாளர் பொற்செழியன், ஈரோடு மாவட்ட ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News October 14, 2024

கோவை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

image

கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கோவை மாநகர காவல்துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவசரகால உதவிக்கு 1077, 0422-2301114, 8190000200 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 13, 2024

கோவை மாவட்டத்திற்கு அலார்ட்

image

தமிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம் (இரவு 7 மணி வரை) கோவை மாவட்டத்தில் கனமழை பெய்ய (ஆரஞ்சு அலார்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.