India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருதமலை கோயிலில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது. அதில், டிக்கெட் விற்பனை எழுத்தாளர் (1 பணியிடம்), அலுவலக உதவியாளர் (2), ஓட்டுநர் (5), பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர் (1), காவலர் (4), திருவலகு (2), விடுதி காப்பாளர் (1), பல வேலை (1), மினி பஸ் கிளீனர் (1) என 19 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லையில் இருந்து ஞாயிறன்று இரவு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை திங்களன்று மேட்டுப்பாளையம் சென்றடையும். அதேபோல் திங்களன்று இரவு புறப்பட்டு மறுநாள் செவ்வாயன்று நெல்லையை சென்றடையும். இந்த சிறப்பு வாராந்திர ரயில் வரும் மே.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கோவை திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் ஏப்ரல் 12ம் தேதி பிரச்சாரம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பாஜக மக்களவை வேட்பாளர் அண்ணாமலை தெப்பக்குளம் மைதானத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது. தந்தை பெயர், தாத்தா பெயர் வைத்துக் கொண்டு கொச்சையாக பேசும் உதயநிதிக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். அவரை போதை உதயநிதி என நாளை முதல் கூப்பிடுகிறோம் என்றார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை தொகுதியில் நேற்று பறக்கும் படையினரின் ஆய்வில் 13 பேரிடம் இருந்து சுமார் 1,12,17,650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கோவை தெற்கு தொகுதியில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 11 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அருண்காந்த் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடம் நேற்று அளித்த மனுவில், அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் காவல்துறையினரின் அனுமதி பெற்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பிரச்சார செய்திகளை வெளியிடுவதற்கு தொலைக்காட்சிகள் கட்டணம் பெறுகின்றன. எனவே இந்த செய்திகளை விளம்பரமாக கருதி செலவினத்தில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கோவை – ஜபல்பூர் சிறப்பு வாராந்திர ரயில் சேவை ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “கோவை – ஜபல்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (50). தங்க நகை மொத்த வியாபாரி. இவரிடம் செல்வபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த செந்தில் முருகன் (42), ராஜி ஆகியோர் வங்கியில் ஏலம் போகும் நகைகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் விற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்.,8 ஆம் தேதி நகை வாங்குவதற்காக சுரேஷ் வழங்கிய ரூ. 31 லட்சத்தை இருவரும் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் உசைன் ஷெரீப்(40), செல்போன் வியாபாரி. இவரிடம், கடந்த 2024-இல் கோவை காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்தி வரும் ரகுமான் சுமார் 436 செல்போன்களை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றியுள்ளார். பின் நேற்று உசைன் ஷெரீப் கோவை வந்து ரகுமானிடம் பணத்தை கேட்டபோது நண்பர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை மாவட்ட காவல்துறையினரால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 67 நபர்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 28 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது 9498181212 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் காவல்துறை தரப்பில் இன்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.