India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை இன்று, தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவினர் உடன் இருந்தனர். கோவையில் அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை வரும் ஞாயிறு (மார்ச். 31) முதல் கோவையில் 9 நாட்கள் பரப்புரை செய்ய உள்ளார் என பாஜக கோவை அலுவலகம் தெரிவித்துள்ளது. இம்முறை கோவை தொகுதியில் பாஜக, திமுக, அதிமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் சிபிஎம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு எடுத்து வரும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.2,09,46,060 பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் ஐடி விங் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நாளை (மார்ச்.27) ஆம் தேதி புதன்கிழமையன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என இன்று (மார்ச்.26) தகவல் வெளியாகி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை குளத்துபாளையம் பகுதியில் இன்று (மார்ச்.26) நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், செ.தாமோதரன், அமுல்கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி பொள்ளாச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
கோவை காந்திபுரம், மில் ரோட்டில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு ஒரு சிறிய முருகன் சிலை வைக்கப்பட்டது. இது நேற்று உடைந்து இருந்தது.
இதனை பார்த்த பக்தர்கள் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடைக்கப்பட்ட கல் சிலையை மீட்டு விசாரித்து வருகின்றனர். இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா 100% வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் வண்ணம் 2 கிராம் தங்கத்தில் பூட்டு சாவியை இன்று (மார்ச்.26) உருவாக்கி உள்ளார்.
மேலும் இதற்காக இரண்டு நாட்கள் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (மார்ச்.26) மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது
கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் கடந்த இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இதயக்கோளாறு , ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் ஏப்.19 ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (மார்ச்.25) கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.