Coimbatore

News February 28, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.27) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 27, 2026

JUST IN: கோவையை உலுக்கிய சம்பவம்.. முக்கிய UPDATE!

image

கோவை விமான நிலையத்தின் பின்புறம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், வரும் மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது, மாவட்ட மகளிர் நீதிமன்றம். இவ்வழக்கில் சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், அவருடன் இருந்த நண்பர் மற்றும் 112 சாட்சிகளில் 78 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2026

கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 27, 2026

கோவை: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

image

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News February 27, 2026

கோவை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

கோவையில் +2 பொதுத்தேர்வை 36 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

image

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு வரும் மார்.2 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 130 மையங்களில் 365 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 19,344 மாணவர்கள், 16,368 மாணவிகள் என மொத்தமாக 35,712 மாணவர்கள், 852 தனித்தேர்வர்கள் என மொத்தமாக 36,564 பேர் எழுத உள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News February 27, 2026

கோவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கோவை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை: நிகழ்ச்சி நிரல்!

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு கோவை வருகிறார். இதனை தொடர்ந்து காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம் மற்றும் நூலகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து காந்தி மியூசியத்தில் பஜனை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்கிறார். இதன் பின்னர் மாலை 4 மணிக்கு நடைபெறும் மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

News February 27, 2026

CM வருகை – கோவையில் குவிக்கப்படும் போலீஸ்!

image

மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு கோவை வருகிறார்.இதையொட்டி, நீலாம்பூர் லீ மெரிடியன் விடுதி மற்றும் எல்.அண்ட்.டி பைபாஸ் சாலை பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1.5 லட்சம் நிர்வாகிகள் கூடும் இம்மாநாட்டிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News February 27, 2026

தொண்டாமுத்தூர்: தவெக-வினரை தட்டி தூக்கிய SPவேலுமணி

image

தொண்டாமுத்தூர் தொகுதியைச் சேர்ந்த தவெக-வைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சுண்டக்காமுத்தூர் மற்றும் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, வேலுமணி கட்சி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெகவினர் அதிமுகவில் இணைந்தது தவெக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!