Coimbatore

News August 4, 2024

நாளை காளான் வளர்ப்பு பயிற்சி 

image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் நோயியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி நாளை ஆகஸ்ட்5 பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்வோர், பயிற்சி நாளன்று, பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- நேரிடையாக செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News August 4, 2024

கோவைக்கு மழை இருக்கு

image

மேற்கு திசை காற்றி வேகமாறு காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. அந்தவகையில், கோவை உள்ளிட்ட 8 மாவட்டத்திற்கு இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவையில் மேட்டுப்பாளையம், வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

News August 4, 2024

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேடு: அண்ணாமலை

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கூறியதாவது. கோவையில் வழக்கறிஞர் உதயகுமார் வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். இச்சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலைகள் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை சீரமைக்க முதலமைச்சர் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

கஞ்சா விற்ற 135 பேர் கைது

image

கோவை மாவட்டத்தில் கடந்த 01.05.2024 முதல் இன்று வரை, மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் 135 நபர்களை கைது செய்து, 88பேர் மீது வழக்கு பதிவு செய்தும், 47 பேரை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 196 கிலோ 220 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி பத்ரிநாராயணன் இன்று தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

நட்புனா என்னானு தெரியுமா

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகள் உண்டு. அந்த வகையில், கோவை நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

பருப்பு, பாமாயில் இம்மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கோவையில் உள்ள 11,04.867 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

News August 4, 2024

TNPL: கோப்பையை வெல்லுமான கோவை அணி

image

TNPL பைனலில் இன்று நடப்பு சாம்பியன் கோவை, திண்டுக்கல் அணியை மோதுகின்றது. இச்சீஸனில் விளையாடிய அனைத்து அணிகளுடன் கோவை வென்றாலும், லீக் சுற்றில் திண்டுக்கலுக்கு எதிராக மட்டும் தோல்வியடைந்தது. கோவை அணியில் கேப்டன் ஷாருக்கான், திண்டுக்கல் அணியில் கேப்டன் அஷ்வின் முக்கிய பங்காற்றி வருகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், யார் கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News August 4, 2024

அமைச்சரை வரவேற்ற திமுக மா.செயலாளர்

image

கோவை மாவட்டத்திற்கு தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வந்திருந்தார். அவரை கோவை மாவட்டம் விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் சால்வை அணிவித்து வரவேற்றாா். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

News August 3, 2024

கோவையில் திறந்து வைக்கிறார் முதல்வர்

image

கோவையில் தமிழ்புதல்வன் திட்டத்தை ஆக.9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள ரூ.460 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், கலைஞர் நூலகம், அறிவுசார் மையம், ஆதரவற்றோர் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

News August 3, 2024

கோவை எம்.பி ஆய்வு 

image

கோவை வஉசி திடலில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கான ஆயத்த பணிகளை எம்.பி கணபதி ராஜ்குமார் நேரில் (ஆகஸ்ட்.3) ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட் அசோசியேசன் (ம) கோவை மாநகராட்சி இணைந்து நடத்த உள்ள தேசிய அளவிலான INDIA SKATE GAMES 2024 போட்டிக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!