India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார். வழித்தடத்தின் மொத்த நீளம் 15.46 கி.மீ. ஆகும். 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இவர், ரூ.9,335 கோடி செலவில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை முதன்மையாளர் விருது 2024க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு நிரப்பப்பட வேண்டிய விண்ணப்பபடிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளமான www.tnpcb.gov.in-இல் உள்ளது. பசுமை முதன்மையாளர் விருது 2024-க்கான முன்மொழிவை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு
மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன்படி, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழ்நாட்டில், வரும் நாட்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீலகிரி, திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டமும், காலை வேளையில் லேசான பனிமூட்டமும், வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார், பாலியல் குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் மீதும் புகார் எழுந்தது. அவரையும் போலீசார் விசாரித்து காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். காவல் உயர் அதிகாரிகள் அவரிடமும் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி (47). அதிமுக வட்டச் செயலாளரான இவர், நேற்று மாலை தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை கவனித்த அவரது மனைவி, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
பிரபல தொழிலதிபரும் ‘ரத்னா ஃபேன் ஹவுஸ்’ நிறுவனத்தின் தலைவருமான அருள் பிரகாச தாசா சுவாமிகள் என்ற கிருஷ்ணமூர்த்தி (81), நேற்று (பிப்.13) காலமானார். வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று (பிப்.14) நடைபெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத அமைப்பிற்கு மூளையாக செயல்பட்ட அபு சலாம் அலி என்ற நபரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். வெகு நாட்களாக தலைமறைவாகி இருந்த அவரை அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போலீசாருடன் இணைந்த அசாம் போலீசார், செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த அபு சலாம் அலியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அரும்பாக்கத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் (18) இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு ஜெய் நகர் அருகே சென்றபோது, முன்னால் வாகனம் வருவதைகண்டு பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக சரண்ராஜ் என்பவரை கைது செய்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.