India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 கிலோ வரையிலான கட்டிடக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே இலவசமாக எடுத்துச் செல்லும் என்றும், ஒரு டன் முதல் 20 டன் வரையிலான கழிவுகளை எடுத்துச் செல்ல 2,500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள், அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் வரும் பிப்.28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வியாபாரிகள் அனைவரும் தவறாமல் பெற்றுக் கொள்ளுங்கள். பிப்.28ஆம் தேதிக்குள், பெற்றுக் கொள்ளாத சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகப்படியான சளி காரணமாக, அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து இன்று (பிப்.17) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள திருவொற்றியூர் கடற்கரையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. வடசென்னையில் பல சுற்றுலா தளங்களை உருவாக்கும் எண்ணத்தில் மாற்றங்களை செய்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக திருவொற்றியூர் கடற்கரை மாற்றம் செய்யப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் கைப்பந்து மைதானங்கள், வாக்கிங் டிராக்குகள், ஜிம்கள், புதிய கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன.
சென்னையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான முஸ்தபா, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஆகியோரை இன்று (பிப்.18) நேரில் சந்தித்து பேசினர். அப்போது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். பின்னர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து பேசியுள்ளனர்.
சென்னையில் உள்ள சிவாலயங்களில் மிகவும் பழமையானது இந்த ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடை அம்மன் கோவில்தான். தியாகராஜ சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் திருவொற்றியூரில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி வருவதால், இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது, 726 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான திருத்தலம். சென்னையில் அமைந்துள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.
சென்னை எழும்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், “எல்லோருடைய இதயத்தில் நிலலாடி கொண்டிருப்பது இந்த இயக்கம். ஒன்றிணைந்து 2026இல் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லை என செங்கோட்டையன் மனகுமறலை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவைவிட தான் ஒரு பெரிய தலைவர் என எடப்பாடி நினைத்தால் அவரை போல ஒரு கூமுட்டை இருக்க முடியாது” என்றார்.
மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனில் பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, போலீசார் அயனாவரம் விஜயகுமார் (34) என்பவரை கைது செய்தனர். மேலும், 9 பெண்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் கடந்தவாரம் மயிலாப்பூரில் உள்ள ஸ்பாவில் 6 பெண்களை மீட்டனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்பா & சலூனில் 9 பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
சென்னை தி நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடையின் நான்காவது மாடியில் பால் சீலிங் உடைத்து உள்ளே குதித்து ரூ.9 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். குமரன் சில்க்ஸ் கடையின் காசாளர் அஜித் (47) என்பவர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.