Chennai

News February 24, 2025

சென்னை: முதல்வர் மருந்தகங்கள் செயல்படும் இடங்கள் 2/2

image

லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்; காமராஜபுரம், பாண்டித்துரை தெரு, வேளச்சேரி; வீரராகவர் தெரு, திருவல்லிக்கேணி; மாநகராட்சி கட்டிடம், சின்னமலை வேளச்சேரி மெயின் ரோடு; நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராஜ நகர்; சுந்தரம் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்; லஸ்.சர்ச் ரோடு, மயிலாப்பூர்; செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் முதல்வர் மருந்தகம் செயல்படும்.

News February 24, 2025

சென்னை: முதல்வர் மருந்தகங்கள் செயல்படும் இடங்கள் 1/2

image

குன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்; ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்; மன்னார் சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு; காந்தி தெரு கே.எம்.நகர், கொடுங்கையூர்; நாட்டுப் பிள்ளையார் கோவில் தெரு, எழு கிணறு; கல்யாணபுரம் தெரு, சூளைமேடு; சாமியார் சாலை, நந்தனம்; கோவிந்தன் தெரு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் முதல்வர் மருந்தகங்கள் அமைந்துள்ளன.

News February 24, 2025

முதல்வர் மருந்தகங்களைத் திறந்த வைத்த முதலமைச்சர்

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.24) முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை தியாகராயர் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னையில் 33 இடங்கள் உள்பட 1,000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்பட்டன. ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் 20- 90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

News February 24, 2025

தனியார் வங்கியில் வேலை; டிகிரி போதும்

image

சென்னையில் தனியார் வங்கியில் 10 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 18-38 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பிப்.28 ஆம்தேதிக்குள் <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 24, 2025

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி

image

பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியை சேர்ந்த கோபிகிருஷ்ணன்(49) தனது உறவினர்கள் 4 பேருடன் சித்தூரில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்தார். அப்போது திருவள்ளூர் அடுத்த பாண்டூர் சாலையில் எதிரே திருத்தணி நோக்கி வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.

News February 23, 2025

கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 20 ரயில்கள் ரத்து

image

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 20 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி நாளை காலை 9:55 மணி ரயிலும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் மாலை 3:00 மணி ரயிலும், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். இதையடுத்து சென்ட்ரல் – பொன்னேரி தடத்தில் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப் D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த<> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க.

News February 23, 2025

பந்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

image

செங்குன்றம் அருகே சாம், கணேஷ் என்கிற தனியார் பள்ளி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ட்ரான்ஸ்பார்மரில் சிக்கிய பந்தை எடுப்பதற்காக, ஒருவர் தோள்பட்டையில் மற்றொருவர் ஏறி நின்று முயற்சி செய்தபோது, மேலே நின்ற கணேஷ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயக்கமடைந்துள்ளார். மேலும், நண்பனை தோளில் சுமந்த சாம் என்ற மாணவர் மீது, பயங்கரமாக மின்சாரம் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 23, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (22.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 23, 2025

சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. தினசரி சேவைகளுடன் சேர்த்து, சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி வழிபாட்டு இடங்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!