India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை விஜயின் வீட்டிற்குள் வீசினார். அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்தில் விஜய் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து மதுரை சென்ற 3 ஆம்னி பேருந்துகள், விருத்தாச்சலம் – வேப்பூர் மேம்பாலம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை திருவான்மியூரில் அமைந்திருக்கும் மருந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.அகத்தியர் இந்த தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். அகத்தியருக்கு, வைத்தியத்தைப் பற்றி இறைவன் உபதேசித்தருளியதால் இத்தலம் இப்பெயர் பெற்றது. இந்த தலத்திற்கு வந்து வழிபட்டு, பால் அபிஷேகம் செய்து விபூதி பிராசதம் உண்டால் தீராத நோய்களும் தீரும் என்பத நம்பிக்கை.தீராத நோய்கள் குணமடைய ஒருமுறை இங்கு செல்லுங்கள்.
தி.நகரில் வசித்து வந்த 13 வயது சிறுமியை 2019 ம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி 2 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். புகாரின் பேரில் 19 வயது நபர் ஒருவர் 16 வயது இளஞ்சிறாரை அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். நேற்று (பிப்.24) 19 வயது நபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் வழங்கியது. இளஞ்சிறார் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தமிழக பாஜகவின் கலைப்பிரிவு செயலாளர் ரஞ்சனா நாச்சியார் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், “தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது. அதனால் விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால், அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, மதுரை, பத்தூர், நாக்பூர், பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா உள்ளிட்ட 25 விமான நிலையங்களை தனியாருக்கு 50 வருட குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னையில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
மத்திய அரசின் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு, முதன்மை அஞ்சலக அதிகாரி, சென்னை பொது அஞ்சலகம், சென்னை – 1 என்ற முகவரியில், இன்று காலை 11:00 மணிக்கு நேர்காணல் நடக்கிறது. ஆர்வமுள்ள 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 044 – 2521 2549 என்ற தொலைபேசி எண் மூலம் விவரங்களை அறியலாம் என முதன்மை அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கணவர் பிரிந்ததால் தாயுடன் 7 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில், சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நோட்டமிட்ட கோவில் பூசாரியான சேகர் (56), சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று டி.வி, பொம்மைகளை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மக்கள் அவரை அடித்து, உதைத்து போலீசிடம் ஒப்படைத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி சேகர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோவில் பூசாரியை சரமாரியாக தாக்கி புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் சேகரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.