Chennai

News April 9, 2025

அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட கூடாது

image

வேகமாக உடற்கட்டழகை கொண்டு வருவதற்காக, அதிகளவு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்ட இளைஞர் சென்னையில் உயிரிழந்தார். அதிகளவு புரோட்டீன் பவுடரால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைத் தூண்டும். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். உணவு மூலமா புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

News April 9, 2025

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை 2/2

image

பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு வழங்கப்படமாட்டாது.

News April 9, 2025

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை 1/2

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், (மாதம்) 10ஆம் வகுப்பில் தோல்வியானால் ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சியானால் ரூ.300, 12ஆம் வகுப்பு தேர்ச்சியானால் ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 9, 2025

மகாவீர் ஜெயந்தி: சென்னை முழுவதும் மதுக்கடைகள் மூடல்

image

மகாவீர் ஜெயந்தி நாளை (ஏப்ரல் 10) வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், கிளப் மற்றும் ஓட்டல் பார்கள் உள்ளிட்டவை முழுவதுமாக மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, நாளை மது விற்க கூடாது.

News April 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

image

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பிரிவில் 17 இடங்கள் உள்ளன. 10, 12ஆம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும். 18-28 வயது உடையவராக இருக்க வேண்டும். டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு இருக்கும். பெண்கள், SC, ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை. வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News April 9, 2025

சண்டையை விலக்க வந்தவர் கொலை

image

ஓட்டேரியைச் சேர்ந்த செந்தில்ராஜ் (41) கடந்த 6ஆம் தேதி புரசைவாக்கம் அருகே ஆட்டோ ஓட்டி சென்றபோது, சாலையில் நடந்து சென்றவர் மீது ஆட்டோ தவறுதலாக இடித்துவிட்டது. செந்தில்ராஜ் மன்னிப்பு கேட்டபோதும், காஞ்சனா என்ற பெண் செந்தில்ராஜிடம் வீண் தகராறு செய்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த இருதரப்பு ஆட்களும் வந்து சண்டையை விலக்கினர். அப்போது, செந்தில்ராஜ் உறவினர் பாலு (57) கீழே தள்ளிவிடப்பட்டதால் உயிரிழந்தார்.

News April 9, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” 08.04.2025 இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பொறுப்பான அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

News April 8, 2025

சிக்ஸ் பேக்ஸ் மோகம்- பலியான பாடி பில்டர் 

image

காசிமேட்டில் உடலை விரைவாக கட்டுமஸ்தாக மாற்ற நினைத்த ராம்கி(35), தனது பயிற்சியாளர் தினேஷ் பரிந்துரைத்த ஸ்டீராய்டை எடுத்துக்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிந்துரை இல்லமால் ஸ்டீராய்டு எடுத்து கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது, சமூக வலைத்தளங்களை பார்த்து வரும் மோகத்தால் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

News April 8, 2025

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

image

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகள் மூடல்

image

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகிற 10ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்க

error: Content is protected !!