Chennai

News October 15, 2024

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 6 ரயில் இடம் மாற்றம்

image

பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கியுள்ளதால், சென்ட்ரலில் இருந்து மங்களூர் செல்லும் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்தும் திருவனந்தபுரம், பெங்களூர் செல்லும் ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்தும், மேலும் சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் ஆவடி ரயில் நிலையத்திலிருந்தும் புறப்பட்டும்.

News October 15, 2024

சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில் ரத்து

image

பேசின் பிரிட்ஜ் ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் இயங்கவிருந்த இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

image

பெரியமேட்டில் கடை நடத்தி வரும் பீகாரைச் சேர்ந்த அகமது சையது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதியம் வெளியே சென்றுவிட்டு கடைக்கு திரும்பிய சையது, கடைக்குள் ஸ்விட்ச் பாக்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

News October 15, 2024

சென்னையில் 300 மழை நிவாரண முகாம்கள் தயார்

image

சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 13,000 தன்னார்வலர்கள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால், அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று துணை முதல்வர் கூறியுள்ளார்.

News October 15, 2024

சென்னை நீர்த்தேக்கங்களின் நிலவரம்

image

சென்னையின் முக்கிய நீர்த்தேக்கங்களான புழல் ஏரி 61.97% கொள்ளளவு எட்டியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 33.55 சதவீதம் கொள்ளளவு எட்டியுள்ளது. வீராணத்தில் 69.9 சதவீதம் கொள்ளளவு எட்டியுள்ளது. தேர்வாய் கண்டிகையில் 60.40 சென்டிமீட்டர் சதவீதம் கொள்ளளவு எட்டியுள்ளது .
சேலம் மேட்டூர் அணையில் தற்போது வரை 57.4% கொள்ளளவு எட்டியுள்ளது.

News October 15, 2024

சென்னையில் இரவு 7 மணி வரை கனமழை

image

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதை அடுத்து, பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இரவு 7 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

எங்கும் மின்தடை ஏற்படவில்லை: உதயநிதி

image

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சென்னையில் சராசரியாக 4.6 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மழைவிட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கியநீர் அகற்றப்படுகிறது. எங்கும் மின்தடை ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

News October 15, 2024

பருவமழை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளது

image

சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் மட்டும் 300 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி 631 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. 13,000 தன்னார்வலர்கள் சென்னையில் உள்ளனர்” என்றார்.

News October 15, 2024

சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார்

image

கனமழை காரணமாக, சென்னையில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 1,000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களில், தண்ணீர், பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து இடையூறு இல்லை என துணை முதல் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.

News October 15, 2024

6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்

image

சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று நீல வழித்தடமான சென்னை விம்கோ நகர் – விமான நிலையம் வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், சென்னை வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில், பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!